படேல் சிலைக்கு 3000 கோடி ‘கஜா’ புயலுக்கு 35 கோடி!

அண்மையில் குஜராத் மாநிலம் நர்மதா அணை அருகே திறக்கப்பட்ட படேல் சிலைக்கு மூவாயிரம் கோடியை ஒதுக்கிய மத்திய அரசு தமிழகத்தின் எட்டு மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ள கஜா புயல் பாதிப்புக்கு வெறும் 350 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இந்நிலையில், திமுக பிரமுகர்களுள்  ஒருவரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்   “உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief”

என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வி வெறும் கனிமொழியின் கேள்வி மட்டுமல்ல, தமிழக மக்களின் கேள்வி முக்கியமாக காவிரி டெல்டா மக்களின் கேள்வியும் கூட இந்நிலையில், கனிமொழியின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக தேசியத் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா

“படேல் சிலை உயிரற்ற சிலை என்றால், தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா?” என்று கனிமொழிக்கு ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் சிலைக்கு யாரும் மூவாயிரம் கோடிகள் ஒதுக்கவில்லை.  இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் மாநிலமான தமிழகத்திற்கு மத்திய அரசு மிக மிக குறைவான நிதியை ஒதுக்குகிறது. ஆனால், வருமானமே ஈட்டிக் கொடுக்காத வட இந்திய மாநிலங்களுக்கு தென்னிந்திய மாநிலங்களில் வருவாயை அள்ளி கொடுக்கிறார் மோடி.

#கஜா_புயல் #Gaja_Cyclone #SAVE_DELTA #காவிரி_டெல்டாவை_காப்போம் #GajaCycloneRelief

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*