பரிதாபம்..ரத்தம் கொடுத்த இளைஞர் உயிரிழந்தார்!

சாத்தூர்  பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்?

கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

விருதுநகர் , சாத்தூர் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இளைஞர்  தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்  கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்த தானம் செய்த இளைஞர் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து  கொண்டார். 24 வயதான அந்த பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாக. அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தார். அந்த பெண்ணுக்கு சாத்தூர் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுள்ள ரத்தம் என்பது தெரியவந்தது.

உயிர்க்கொல்லி நோயான ஹெச்.ஐ.வி ரத்தத்தை அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியது இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில்,  எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ள பெண்ணின் ரத்தத்தை கொடுத்துள்ள இளைஞர் மன உளைச்சலால் தனது சொந்த ஊரான கமுதி அருகில் உள்ள திருச்சிலுவை புரத்தில் எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் உறவுப்பெண் ஒருவருக்கு ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது அங்கு நடந்த ரத்தப்பரிசோதனையில் அவர்க்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவர உடனே அவர் உடனே அவர் சிவகாசி மருத்துவமனையை தொடர்பு கொண்டு தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாகவும் எனவே தன் ரத்தத்தை யாருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். “தனக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாமல்தான் ரத்த தானம் செய்தேன். தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

#Tamilnadu_Health_Department #Hospital_ Sivakasi #தமிழக_சுகாதாரத்துறை #கர்ப்பிணிப்பெண்ணுக்கு_ஹெச்_ஐ_வி_ரத்தம்

#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்?

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*