பாஜகவுக்கு பயந்து கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்த அதிமுக!

18,000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்த காங்கிரஸ் அரசுமோடிக்கு நெருக்கடி!

ஓ.பன்னீசெல்வம் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட்!

சபரிமலையில் அய்யப்பனை வழிபட்ட 4 திருநங்கைகள்!

அதிமுக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் ‘கஜா’ புயல் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை அதிமுக நடத்தும் சிறுபான்மை மக்களை கவரும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை கஜா புயல் காரணமாக ரத்து செய்துள்ளதாக அதிமுக அரசு காரணம் கூறினாலும். பாஜகவின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்துவரும் அதிமுக பாஜகவுக்கு பயந்து கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கஜா புயலை காரணம் காட்டி அதிமுக அரசு எந்த நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யவில்லை. சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியது. முதல் முறையாக முதல்வரே கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை துவங்கிவைத்தார் என்று அதிமுகவினரே பெருமையாக குறிப்பிட்டார்கள். இது போல இந்து மதம் சார்ந்த பல நிகழ்ச்சிகளிலும் அதிமுகவினர் கலந்து கொள்ளும் நிலையில், கஜா புயலை காரணம் காட்டி கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பது அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்களிடையே பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
குமரி மாவட்டத்தில் பாஜக எம்.பியாக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் நடைபெறுவதை விரும்பவில்லை என்றும். அவரது அறிவுரையை ஏற்று கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளாதாக அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் நம்புகிறார்கள்.

#கிறிஸ்மஸ்_விழா #அதிமுக #ஜெயக்குமார்

ராகுலை முன்மொழிந்த ஸ்டாலின் -வதந்தி பரப்பும் ஊடகங்கள்-உண்மை என்ன?

கமல்நாத் பாணியில் டெல்டா விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வாரா பழனிசாமி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*