”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், பிளவு பட்ட அதிமுகவில் தினகரன் ஆதரவாளராகவும் இருந்து வந்த செந்தில் பலாஜி திமுகவில் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. அதனுடைய தொடர்ச்சியாக செந்தில்பாலாஜி திமுகவில் சேரும் முடிவை எடுத்துள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் திருமண விழா ஒன்றுக்கு வந்த ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்ததாகவும், அச்சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், தனக்கு அரசியல் எதிர்காலம் இருப்பதாகவும் செந்தில்பாலாஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்- இபிஎஸ் குழுவினருடன் முதலில் இணைய விரும்பிய செந்தில்பலாஜி தன் நண்பர்கள் மூலம் பேச ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருமே செந்தில்பாலாஜிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  மேலும், கட்சியில் சேருங்கள் பதவியை பின்னர் பார்க்கலாம் என்பது போல பேசியதால் அதிருப்தியில் இருந்த நிலையில்தான் திமுக பிரமுகர்கள் அன்பில் பொய்யாமொழி, ஆ.ராசா ஆகியோர் செந்தில்பாலாஜிக்கு நம்பிக்கையளித்தனர்.

கொங்குமண்டலத்தில் இழந்த செல்வாக்கை திமுக மீண்டும் மீட்டெடுக்க செந்தில்பலாஜியின் வரவும் கைகொடுக்கும் என ஸ்டாலின் நம்புவதால் அவருக்கு முக்கிய பதவி வழங்குவதோடு, கட்சியிலும், ஆட்சி அமையும் பொது உரிய முக்கியத்துவமும் கொடுக்கப்படும் என திமுக தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக  தெரிகிறது.

”விரைவில் கரூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பிரமாண்ட விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் சிலருடமும், தொண்டர்களுடன் திமுகவில் இணைவேன்” என்று செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார்.

#SenthilBalaji #DMK #MKStalin #TTVDhinakaran #amma_makkal_munnetrakazakam #அம்மா_மக்கள்_முன்னேற்றக்கழகம்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*