பிரம்மசரியத்தை பின்பற்ற முடியாதவர்கள் பாதிரியார் பணிகளில் இருந்து வெளியேற போப் கோரிக்கை!

உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களின் தலைவராக இருகும் போப் பிரான்சிஸ் அகதிகள், நிறவேற்றுமை, போர் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முற்போக்கு எண்ணம் உடையவராக உள்ளார்.ஆனால் , கத்தோலிக்க குருக்களிடம் மிகக் கடினமான கட்டுப்பாடுகளை பேணிவருகிறார்.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின்னர் கத்தோலிக்க குருக்களின் பிரம்மச்சரியம் பற்றி பேசியிருக்கிறார். நூல் ஒன்றில் இது பற்றி எழுதியுள்ள போப்:-

“ஓரினச்சேர்க்கை வெகுவாக உலகம் முழுக்க பரவி வருகிறது. ஒரு நாகரீகமாக அது பரவிவருகிறது. ஓரினச்சேர்க்கைக்கு கத்தோலிக்க திருச்சபையில்   இடமில்லை. பிரம்மச்சரியத்தை பின்பற்ற முடியாதவர்கள்  கத்தோலிக்க குருக்கள் பணியில் இருந்து விலகி விட வேண்டும். இதே கருத்து  கத்தோலிக்க பெண் துறவிகளுக்கும் பொறுந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையில் குருவானவராகவோ, பெண் துறவிகளாகவோ ஆகும் எவரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. என்பது விதி. உலகெங்கிலும் குருக்கள் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டை அடுத்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் போப்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*