பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

முத்தலாக் மசோதா- அதிமுக நிலைப்பாடும் அன்வர்ராஜாவும்!

’ஜெ;  மரணம் – சந்தேகம் மரணம்? -ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்!

#Petta டீசர் வெளியானது!

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் கலைஞரை விட வயதில் மூத்தவரும், திமுகவின் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதில் மிக முக்கியமாக செயலாற்றியவரும், திமுக தலைவர் கருணாநிதியோடு நெருக்கடியான காலங்களில் தோளோடு தோள் நின்று திமுகவை காத்தவருமான பேராசியர் அன்பழகனுக்கு 97 வயது முதுமை காரணமாக  வீட்டில் இருந்தாலும், கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.சில நாட்களுக்கு முன்னர் தனது 97 வயது பிறந்த நாளைக் கொண்டாடினார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று உடல் நலம் குன்றிய பேராசிரியர் அன்பழகன் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#DMK_GENERAL_SECRETARY_ANBAZHAKAN #PERASIRIYAR_ANBAZHAN #பேராசிரியர்_அன்பழகன்

போராடும் ஆசிரியர்களைச் சந்தித்த ஸ்டாலின்!

அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்- முஸ்லீம்கள் அதிர்ச்சி!

சாத்தூர் பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*