போராடும் ஆசிரியர்களைச் சந்தித்த ஸ்டாலின்!

அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்- முஸ்லீம்கள் அதிர்ச்சி!

சாத்தூர் பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

இந்த புகைப்படம் உங்களை அதிர வைக்கிறதா?

“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வேண்டும் என்று ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2009 ஜூன் மாதத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்களுக்கும் அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் 3,770 ரூபாய் சம்பள வித்தியாசம் இருக்கின்றது என்ற பிரச்னையை இடைநிலை ஆசிரியர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் அதை நியாயமான முறையில் தீர்க்க எண்ணாமல் அரசு உதாசீனப்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது.

அறவழியில் அமைதியாகப் போராடும் அரசு ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறேன் என்று உறுதியளித்து நம்பவைத்துவிட்டு, பிறகு அவர்களை ஏமாற்றி இருக்கும் முதலமைச்சரின் பிழையான செயல் ஒரு முதலமைச்சருக்கு உள்ள நற்பண்பு அல்ல. பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தொடர் போராட்டத்திலும் உண்ணாவிரதத்திலும் தங்களின் உயிரைத் துச்சமென நினைத்துப் போராடி, பல ஆசிரியர்கள் மயக்கமடைந்து இருக்கும் உயிருக்கு ஆபத்தான இந்த நிலையிலும் அதிமுக அரசு சம்பந்தம் இல்லாததைப்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது விபரீதமானது, மன்னிக்க முடியாதது.

தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மனஉறுதியுடன் போராடிக் கொண்டிருப்பதை நான் இன்று நேரில் பார்த்த போது, அதிமுக அரசுக்கு சிறிதளவு கூட மனிதாபிமானமோ மனிதஉயிரைப் பற்றிய சரியான மதிப்பீடோ இல்லை என்பதை உணர்ந்தேன். ஜனநாயக ரீதியிலான இதுபோன்ற போராட்டங்களை முறையான பேச்சுவார்த்தைகளின் மூலம் நேர்மையான தீர்வு காண்பதைப்பற்றிச் சிந்திக்காமல் அறவே புறக்கணிக்கும் இந்த அரசின் ஆசிரியர் விரோத நிலைப்பாடு அரசு நிர்வாகத்தில் பின்னடைவு விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஆகவே, மாண்புமிகு முதலமைச்சர் திரு பழனிசாமி அவர்கள் இந்தப் பிரச்சினையில் எந்த கௌரவமும் கருதாமல் உடனடியாக நேரடியாகத் தலையிட்டு, போராடும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி அவர்களின் ஊதிய முரண்பாட்டினை அகற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உயிருக்கு ஊறு நேர்ந்திடும் நிலையில், ஆண் – பெண் இடைநிலை ஆசிரியர்கள் தீர்மானமாகப் போராடிக் கொண்டிருப்பதால், தாமதப்படுத்தாமல் இப்பிரச்சினையில் உடனே தலையிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்.

#இடைநிலை_ஆசிரியர்கள்_போராட்டம் #ஆசிரியர்கள்_போராட்டம் #idainilai_aasiriyargal_porattam

ஒபிஎஸ் தம்பியை மீண்டும் அதிமுகவில் இணைத்த பாஜக!

 “நாங்கள் ஏன் தப்பித்து ஓடினோம்”? -மனிதி பெண் விளக்கம்!

வெட்கப்பட வேண்டியவர்கள் நாம்தான் மனிதி அல்ல!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*