முத்தலாக் மசோதா- அதிமுக நிலைப்பாடும் அன்வர்ராஜாவும்!

’ஜெ;  மரணம் – சந்தேகம் மரணம்? -ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்!

#Petta டீசர் வெளியானது!

சபரிமலைஅய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடுவதை மூர்க்கமாக எதிர்க்கும் பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் கேரளாவில் கலவரச்சூழலை உருவாக்கி வரும் நிலையில், இஸ்லாமிய ஆண்களை மூன்று ஆண்டுகள் வரை சிறையில் தள்ளும் கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்ட ‘முத்தலாக் மசோதாவை’ மாநிலங்களவையில் அமல்படுத்தியது.

இந்த மசோதா மக்களவையில் அமல்படுத்தப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேறாமல் இருந்தது. இந்த முத்தலாக் விவகாரத்தை பொறுத்தவரை அதிமுக இது பற்றி வாயே திறக்கவில்லை. பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சித்தாராமனைச் சந்தித்த போது, அவர் “ஏற்கனவே நம்பிக்கையில்ல தீர்மானம் வந்த போது அதிமுக வெளிநடப்பு செய்யாமல் எங்கள் அரசை ஆதரித்து வாக்களித்தது. அப்படி நீங்கள் வாக்களித்ததால்தான் பாஜகவுக்கு நம்பிக்கையான விசுவாசிகள் என்பது உறுதியானது. மேலும் பரஸ்பரம் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் விதமாக முத்தலாக் மசோதாவை அதிமுக ஆதரிக்க வேண்டும்” என்று சொன்னதாகவும், அதற்கு அதிமுகவினர் நாங்கள் இது பற்றி பேசமுடியாது. முத்தலாக் மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், வெளிப்படையாக பேசினால் அதிமுகவுக்குள் இருக்கும் முஸ்லீம்களை பகைத்துக் கொள்வது போலாகி விடும் என்றிருக்கிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை முத்தலாக் மசோதாவை எதிர்க்க முடியாது. எதிர்த்தால் பாஜகவை பகைத்துக் கொள்வது போலாகி விடும் . எதிர்க்கா விட்டால் முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த அதிமுக பிரமுகர்களை சமாளிக்க முடியாது எனவே, அதிமுக எம்.பி, அன்வர்ராஜாவை  அழைத்த தம்பிதுரை முத்தலாக் மசோதாவுக்கு எதிராக பேசுங்கள் கட்சியின் கருத்தாக அல்லாமல் தனிப்பட்ட கருத்தாக உங்கள் குரலை பதிவு செய்யுங்கள் என்று கூற, அன்வர் ராஜாவும் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக பேசியிருக்கிறார்.  தன் பேச்சின் முடிவில் நான் எதிர்க்கிறேன் என்று தன் தனிப்பட்ட எதிர்ப்பாக பதிவு செய்தார். மற்றபடி அதிமுக எம்.பிக்கள் வேறு எவரும் இது பற்றி பேசவில்லை.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவோடு கூட்டணி வைக்க அதிமுக விரும்பவில்லை.ஆனால், கூட்டணி வைத்தே ஆக வேண்டும். 15 தொகுதிகள் வரை எங்களுக்கு வேண்டும். அப்படி நீங்கள் கொடுத்தால் மட்டுமே ஆட்சியில் நீடித்திருக்க முடியும். என்று மிரட்டுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் அதிமுகவினர்.

#முத்தலாக் #Tribal_Talac ##Tribal_Talac_BJP #இஸ்லாமிய_தனிச்சட்டம் #இஸ்லாமியசமூகம்

போராடும் ஆசிரியர்களைச் சந்தித்த ஸ்டாலின்!

அதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்- முஸ்லீம்கள் அதிர்ச்சி!

சாத்தூர் பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*