முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு?

’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்?

கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

அதிமுக- பாஜக கூட்டணி ஜெயலலிதா மரணத்தின் பின்னர் உருவானது. வெளிப்படையாக இல்லா விட்டாலும் பாஜக வகுத்துக் கொடுக்கும் பாதையில்தான் அதிமுக ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களை பாஜகவுடனான நல்லுறவுக்காக விட்டுக் கொடுத்த ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவருமே இப்போது  எதையும் மறைக்க முடியாமல்  தடுமாறுகிறார்கள்.

 

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முதலில் கூறி வந்த அதிமுகவினர் இப்போது, தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம் என்கிறார்கள். இந்நிலையில் தான் முஸ்லீம் ஆண்களுக்கு எதிரான முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக என்ன செய்ய போகிறது என பலரும் எதிர்பார்த்த நிலையில், அதிமுக முத்தலாக் மசோதா பற்றி மவுனமாகவே இருந்தது. ஆனால், மக்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் அதிமுக எம்.பி அன்வர் ராஜா மிகக்கடுமையாக அந்த மசோதாவை  விமர்சித்து பேசினார். மற்ற அதிமுக எம்.பிக்கள் எவரும் பேசவில்லை. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. பாஜக வுக்கு போதுமான பலம் மாநிலங்களவையில் இல்லாத நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரின் ஆதரவும் இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு தேவைப்படுகிறது. மக்களவையில் முஸ்லீம் சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாக அன்வர் ராஜா இருந்தது போல, மாநிலங்களவையில்  இல்லை.

குறிப்பாக முஸ்லீம்கள் எவரும் இல்லை. மக்களவையில் முத்தலாக் மசோதாவை அன்வர்ராஜா எதிர்த்த நிலையில், அது பற்றி பாஜகவுக்கு விளக்கம் கொடுத்த அதிமுக “அன்வர்ராஜா பேசியது அதிமுகவின் கருத்து அல்ல, அவரது தனிப்பட்ட கருத்து” என்று கூறியிருக்கிறது.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற அதிமுகவின் ஆதரவு தேவை என்னும் நிலையில், மசோதாவை எதிர்க்க முடியாமல் தவித்து வருகிறது அதிமுக. எனவே மசோதாவை ஆதரித்து இதுவரை ரகசிய கூட்டணியாக இருக்கும் அதிமுக-பாஜக உறவை வெளிப்படையாக்கி விட்டு தேர்தலை நோக்கி பயணிக்க  வேண்டியதுதான் என்பது இபிஎஸ்- ஒபிஎஸ் இருவரின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

#Triple_Talaq #முத்தலாக் #இஸ்லாமியர்கள் #முஸ்லீம்தனிநபர்சட்டம் #Anwar_Raja #அதிமுக_பாஜக_கூட்டணி

#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்?

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

 

 

#Jayalalitha_dead #Apollo # #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*