மூன்றாவது முறையாக புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற ஸ்டாலின்!

கஜா புயல் பாதிப்பால  சேதமடைந்த காவிரி டெல்டா பகுதிகளுக்கு மூன்றாவது முறையாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து  உதவிகளை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், அந்த அனுமதிக்கு எதிராக திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிகளையும் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்:-

“ இன்று (04-12-2018) கஜா புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், காவாளக்குடி, கண்கொடுத்தவணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், வெள்ளாக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய ஊர்களில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தேன். அவர்களிடத்தில் ‘உங்களுக்குத் தேவையான உதவிகளை திமுக வினர் முடிந்தளவு செய்து தருவார்கள்’ என்கிற உறுதியையும் அளித்தேன்.பாதிக்கப்பட்ட மக்கள் “இன்னும் எங்கள் பகுதிகளுக்கு இழப்பீட்டை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்க அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை” என வேதனையோடு தெரிவித்தனர்.பின்னர், மாவூர், மாங்குடி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு 30 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினேன்”என்று பதிந்துள்ளார்.

#கஜா_புயல் #Gaja_Cyclone #Kaviri_Delta #save_kaviri_delta

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*