மோடியின் ஒரு இந்தியா அம்பானிக்கானது –ராகுல் காட்டம்!

London: Congress President Rahul Gandhi speaks at an interactive session at London School of Economics, London on Friday, August 24, 2018. (PTI Photo) (PTI8_25_2018_000049B)

பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கி இருக்கிறார். ஒன்று அனில் அம்பானிக்கானது. இன்னொன்று விவசாயிகளுக்கானது என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் விலை போகாமல் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விலை போக, அதிருப்தி அடைந்த விவசாயி  அதில் கிடைத்த ரூ.1,040 ரூபாயைப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.

இதே சூழலில் பல லட்சம் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர். இந்த சூழலில்தான் நாசிக் விவசாயி விலை போகாத வெங்காயத்தின் விலையை மோடிக்கு அனுப்பினார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-

“பிரதமர் மோடி இரண்டு இந்தியாக்களை உருவாக்கி உள்ளார் ஒன்று விவசாயிகளுக்கானது.மற்றொன்று ஒன்று செய்யாத அனில் அம்பானிக்கானது. விமானமே தயாரிக்காமல் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெற்று முப்பதாயிரம் கோடி கொடுத்துள்ளார். மோடியின் இன்னொரு இந்தியா விவசாயிகளுக்கானது. அவர்கள் வெங்காயத்தை விளைவித்து நான்கு மாதங்களுக்குப் பின் அவர்களுக்கு ஆயிரத்து நாற்பது ரூபாய் மோடியிடம் இருந்து கிடைத்துள்ளது” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

#modi #Ragulgandhi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*