மோடியை டென்ஷனாக்கும் ஸ்டாலின்!

கமலை கூட்டணிக்கு அழைத்த ஒரே கட்சி – தனித்து போட்டியிட முடிவு!

தமிழகத்தை வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெருமளவு நம்பியிருந்த நிலையில், பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதால் பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் டென்ஷன் ஆகி உள்ளார்கள்.ஸ்டாலினை எப்படி சமாளிப்பது என்று தமிழக தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.

#

பிரதமர் ராகுல்

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைகிறதோ இல்லையோ, ஆனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் தேசிய அளவில் பல செய்திகளை அனைத்து கட்சிகளுக்குமே அறிவித்திருக்கிறது. பாஜக வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படும் நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக  ராகுலை விட பொறுத்தமான முகம் வேறு எதுவும் இல்லை. தவிறவும்,  அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வரும் காங்கிரஸ் தேசிய அளவிலும் நம்பிக்கையளிக்கிறது. என்பதை புரிந்து கொண்ட ஸ்டாலின் மிகப் பொறுத்தமாக ராகுலை பிரதமராக முன்மொழிந்தார். தவிறவும் தமிழகத்தில் திமுக தலைமையில் அமையவிருக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெரும் சூழலில் ராகுல் பிரதமராவது எளிதாகும் என்பதாலும் தமிழகக் கட்சியான திமுக மிகச்சரியாகவே முடிவெடுத்தது.

#

தொடர் சாடிஸ்ட் அட்டாக்!

பிரதமராக ராகுலை முன்மொழிந்த அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சாடிஸ்ட் மோடி என்று விழித்தார். இந்திய அரசியலில் முதன் முதலாக வெகுசனக் கட்சி ஒன்றின் தலைவர் பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்றதை பாஜக எதிர்பார்க்கவில்லை. இன்று திருமண விழா ஒன்றில் பேசிய ஸ்டாலின் ஒன்றுக்கு மூன்று முறை மோடியை சாடிஸ்ட் என்றதோடு, இந்தியாவில் இருந்து பாஜக என்னும் வாசனையே இல்லாமல் ஆகும் சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

இது பாஜக முகாமையே ஆட்டம் காண வைத்துள்ளது. வர்தா, ஓக்கி, கஜா என எந்த புயல் பாதிப்பிற்கும் இழப்பீடு கொடுக்காததோடு, ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத பிரதமரை சாடிஸ்ட் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல வேண்டும் என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலே இல்லை.

இந்நிலையில், தமிழக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய மோடி “எதிர்க்கட்சிகள் தங்களை தற்காத்துக்கொள்ள கூட்டணி அமைத்துள்ளார்கள்” என்றார். மேலும், ஜனவரி மாதத்தில் இருந்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மோடிக்கு கடும் எதிர்ப்பு உருவாகும் என்பதால் அதற்கு முன்பே கட்சியினரை தயார் படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் பாஜகவினர்.

என்றாலும், தொடர்ந்து திமுக பாஜகவை கடுமையாக எதிர்ப்பதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் திணறிவரும் பாஜக திமுக தலைவரை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் திணறி வருகிறது.

#சாடிஸ்ட்மோடி #திமுகதலைவர்_ஸ்டாலின்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*