ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

பாஜகவுக்கு பயந்து கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்த அதிமுக!

#SadistModi. என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது?

ரஃபேல் வழக்கு தொடர்பான டிசம்பர் 14, 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது யஷ்வன்ட் சின்ஹா, பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி ஆகியோரின் கூட்டறிக்கை

(மொழியாக்கம்: பொறியாளர் சிவகுமார்)
யஸ்வந்த் சின்ஹா ,பிரஷாந்த் பூஷன் அருண் ஷோரி இந்த மூவரும், மற்றும் சிலரும் இந்த பொது நல வழக்கின் மனுதாரர்கள்..
இந்த வழக்கானது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பானது. முன்னதாக 126 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதை மோடி தன்னிச்சையாக ரத்து செய்ததோடு அதற்கு பதிலாக 36 விமானங்கள் மட்டுமே வாங்க ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்தார்., இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டஸ்ஸால்ட்(Dassault ) நிறுவனத்தின் இந்திய ஆப்செட் பங்குதாரராக அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு புதிய நிறுவனம் சேர்க்கப்பட்டது. அது இந்தத் தொழிலில் எந்த முன் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனம். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) விசாரணை கோரி நாங்கள் அளித்த மனுவின் மீதான இப்போதைய உச்ச நீதி மன்றத் தீர்ப்பு குறித்த எங்களின் கூட்டு அறிக்கை வருமாறு: .
மேற் குறிப்பிட்டபடி நீதி மன்றத்தின் நேரடி மேற்பார்வையிலான ஒரு விசாரணை கோரும் எங்கள் மனுவை ரத்து செய்து உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை மட்டுமல்ல பெரும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நாங்கள் கீழ் கண்ட விவரங்களுடன் சி பி ஐ இடம் புகார் அளித்த பிறகே உச்ச நீதி மன்றத்தை அணுகினோம்.
கடந்த ஏப்ரல் 15 2015 அன்று பிரதமர் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார் . இப்படி ஒரு 36 விமானங்களை வாங்குவதற்கு எந்த முறையான கோரிக்கையையும் இந்திய விமானப் படைகளின் தலைமை அலுவலகத்தில் இருந்தும், Defence Acquisition Council (DAC) எனப்படும் பாதுகாப்பு துறையின் கொள்முதல் குழுவிடமிருந்தும் முறையான அனுமதியை பெறாமல் இந்த ஒப்பந்தம் முடிவு செய்ய பட்டது. இந்த இரண்டு அனுமதிகளும் எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான கொள்முதலுக்கும் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய கொள்முதல் விதிகள் ஆகும்.
முன்னதாக இந்திய விமானப்படை தங்களுக்கு 126 போர் விமானங்கள் வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகிறது. அதைத் தொடர்ந்து DAC எனப்படும் பாதுகாப்புத் துறையின் கொள்முதல் குழுவின் ஒப்புதல் அளிக்க பட்டு ஒப்பந்தங்கள் (TENDER) கோரப்பட்டு, 6 நிறுவனங்கள் பங்கேற்றதில் 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் டஸ்ஸால்ட் நிறுவனம் குறைந்த விலை (Lowest Tender ) அடிப்படையில் இறுதி தேர்வு செய்ய பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி மொத்தம் 126 விமானங்கள் வாங்கப் படும். அதில் 18 மட்டுமே பறக்கும் நிலையில் (fly condition ) கொள் முதல் செய்ய படும் என்றும் மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவின் HAL எனப்படும் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மூலம், விமான தயாரிப்பு தொழில் நுட்ப பரிவர்த்தனை (Technology Transfer) முறையில் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய படும் என்றும் ஒப்பந்தம் செய்ய பட்டது .
கடந்த 2015 மார்ச் 15-ம் நாள் இந்த ஒப்பந்தம் 95% பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து இறுதி முடிவு செய்யப்பட்டு விட்டதாக டஸ்ஸால்ட் (Dassault ) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO ) இந்திய விமானப்படை அதிகாரிகள் ,மற்றும் HAL அதிகாரிகள் அனைவரும் தெரிவித்தனர். மேலும் வெகு விரைவில் இந்த ஒப்பந்தம் கை எழுத்தாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இப்படி ஒரு ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்ற நிலையில் இதற்க்கு முற்றிலும் மாறாக கடந்த ஏப்ரல் 10-ம் நாள் பிரதமர் 36 விமானங்களை பறக்கும் நிலையில் (fly condition) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக கை எழுத்திடுகிறார். இதன் மூலம் 126 விமானங்கள் என்பது 36 ஆக குறைக்க பட்டது , மட்டுமல்ல 108 விமானங்களை உள் நாட்டிலேயே தொழில் நுட்பப் பரிவர்த்தனை மூலம் தயாரிக்கும் “மேக் இன் இந்தியா” (Make in India ) திட்டமும் புறம் தள்ள பட்டுக் கை விட பட்டது. அதோடு ‘ஆப்செட் பார்ட்னர்’ (Offset Clause /Offset Partner ) எனப்படும் உள் நாட்டு உற்பத்தி பங்குதாரர் என்ற புது விதி ஒன்றும் ஒப்பந்தத்தில் சேர்க்கப் பட்டது. சரியாக இதே வேளையில் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபென்ஸ் (Reliance Defence ) எனும் பெயரில் ஒரு புது கம்பெனியைப் பதிவு செய்கிறார். டஸ்ஸால்ட் (Dassault ) நிறுவனமும் இந்தப் புது வரவான ரிலையன்ஸ் டிபென்ஸ் (Reliance Defence ) நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். மொத்த உள் நாட்டு உதிரி பாக உற்பத்தி கான்ட்ராக்ட்டுகளும் ரிலையன்ஸ் டிபென்ஸ் -நிறுவனத்திற்கே கொடுக்க பட வேண்டும் என்பதே அது. சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் ஹோலண்டே கூட இது பற்றிக் கூறும் போது எந்தவித முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அது முழுக்க இந்திய அரசின் தேர்வு தான் என்றும் குறிப்பிட்டது இங்கு நினைவு கொள்ளத் தக்கது .
இதன் பிறகு வெளியான தகவல்களின் படி பேச்சு வார்த்தை குழுவில் இடம் பெற்ற சில அதிகாரிகள் இந்த 36 விமானங்களின் நிர்ணய விலையை 5.2 பில்லியன் யூரோ என்று முடிவு செய்ததாகவும் , பின்னர் அது பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றக் குழுவின் மூலம் 8.2 பில்லியன் யூரோ என்று முடிவு செய்யப்பட்டு முடிவில் பேச்சு வார்த்தைக்குப் பின் 7.2 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 58,000 கோடி ரூபாய்கள்) என்று இறுதி முடிவு செய்ய பட்டு ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது. இதன் படி ஒரு விமானத்தின் விலை 1650 கோடி ரூபாய்கள். இந்த ஒப்பந்தம் முடிந்த சிறிது நேரத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறியது இங்கே குறிப்பிட தக்கது. பழைய ஒப்பந்தத்தின் படி 90,000 கோடி ரூபாய்களுக்கு 126 விமானங்கள் வாங்கி இருக்க முடியும் என்றார் அவர். அதன் படி ஒரு விமானத்தின் விலை 715 கோடிகள் மட்டுமே.
மேல் குறிப்பிட்ட இந்த உண்மைகளின் அடிப்படையில் தான் நங்கள் சி பி ஐ அணுகி புகார் அளித்தோம் ஆனால் அவர்கள் அந்தப் புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யவில்லை . இதன் அடிப்படையில் தான் நாங்கள் நீதி மன்ற மேற் பார்வையிலான ஒரு சுதந்திரமான விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.
இன்றைய உச்ச நீதி மன்றத் தீர்ப்பானது மேற்கணட எந்த உண்மைகளையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் எங்கள் முக்கிய கோரிக்கையான நீதி மன்ற மேற்பார்வையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதையும் பரிசீலிக்க வில்லை. மாறாக நாங்கள் ஏதோ அந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்குவது என்ற ரீதியில் அணுகி, மத்திய அரசு அளித்த சீல் வைக்கப்பட்ட கவர்களில் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவல்கள் எதுவும் மனு தாரர்களான எங்களிடம் பகிரப்பட வில்லை. தீர்ப்பில் கூற பட்டுள்ள தகவல்கள் ஆவணங்களில் இல்லாதது மட்டுமல்ல முற்றிலும் தவறானவை .
நீதிமன்றத் தீர்ப்பில் 25-ம் பாராவில்,
“விமானத்தின் விலை, CAG எனப்படும் (Comptroller and Auditor General ) மத்திய தணிக்கை ஆணையர் அவர்களிடம் தெரியப்படுத்தப் பட்டு, அவரின் அறிக்கை PAC எனப்படும் பொதுக் கணக்குக் குழுவிடம் (Public Accounts Committee) அளிக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டு ஒப்புதல் அளிக்க பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் ஒரு சிறு பகுதி மட்டுமே பாராளு மன்றத்தின் முன் வைக்கப் பட்டது. அதுவே பொது வெளியிலும் உள்ளது.”
எனக் கூறப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் நீதி மன்ற ஆவணங்களில் இல்லாதது மட்டுமல்ல முற்றிலும் தவறானவை. PAC அறிக்கை, CAG அறிக்கை என எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை அல்லது பொது வெளியிலும் அந்தத் தகவல்கள் இல்லை. உண்மைக்கு மாறான இந்தத் தகவல்கள் மத்திய அரசு நீதி மன்றத்தில் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். (இந்தத் தகவல்களும் ஆவணப் படுத்தப்படவிம் வில்லை, எங்களுக்குத் தெரிவிக்கப் படவும் இல்லை) இது போன்ற உறுதி செய்யப் படாத தகவல்களையும், மூடி சீல் வைக்கப்பட்ட கவர்களில் இருக்கும் அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவது மிகுந்த ஆபத்தான ஒன்றாகும்.
அதே பாராவில் இந்திய விமான படைத் தலைவர், இந்த விமானத்தின் விலையைப் பொது வெளியில் வெளியிடுவது நாட்டின் பாது காப்பிற்கு அச்சுறுத்தலாக முடியும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் ஆவணங்களில் இல்லை. இந்தத் தகவல்கள் நீதி மன்றத்திற்கு எப்படிக் கிடைத்தன என்றும் தெரிய வில்லை. மேலும் விமானங்களின் விலை பற்றியும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த விதி முறைகள் பற்றியும் விமானப் படை அதிகாரிகளை விசாரித்ததாகக் கூறப்படுகிறது . இதுவும் தவறான தகவல் . விமானப் படை அதிகாரிகளிடம் கேட்கப்பட்ட இரண்டே கேள்விகள் ரஃபேல்( rafale) போர் விமானங்கள் எந்த ரகத்தை சேர்ந்தவை (3rd,4th or 5th Generation) என்பதும், கடைசியாக இந்தியாவிற்கு எப்போது போர் விமானங்கள் வாங்க பட்டன என்பது மட்டுமே. மற்றபடி விமானங்களின் விலை பற்றியும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த விதி முறைகள் பற்றியும் விமானp படை அதிகாரிகளை விசாரிக்கவே இல்லை. நீதி மன்ற நடவடிக்கையில் இது போன்ற ஒரு விசாரணை நடை பெறவே இல்லை .
கொள்முதல் மற்றும் ஒப்பந்த விதி முறைகள் பற்றி வருவோம், முந்தைய ஒப்பந்தமான 126 விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் தடை பட்டு நின்று விட்டதாகவும் , அதன் பின்னரே 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய பட்டதாகவும் மத்திய அரசு கூறுவதை நீதி மன்றம் பணிவுடன் அப்படியே ஏற்று கொள்கிறது. இது தொடர்பாக 2015 மார்ச் 25 அன்று டஸ்ஸால்ட் நிறுவனத்தின் CEO பேட்டி அளித்ததை நாங்கள் வீடியோ ஆதாரத்துடன் சமர்பித்தோம். அதில் அந்தp பழைய 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் 95% பேச்சு வார்த்தை முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் கை எழுத்தாகும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் அவர் இந்திய அரசின் பொதத் துறை நிறுவனமான HAL உடன் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், HAL உடனான ஒப்பந்தம் தங்களுக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தார். இதை நீதி மன்றம் கணக்கில் கொள்ளவே இல்லை .
இந்தப் புதிய 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கொள்முதல் மற்றும் ஒப்பந்த விதி முறைகள் மீறப் பட்டுள்ளன என்பதை நாங்கள் ஆதாரத்துடன் சுட்டி காட்டினோம் . அதாவது ஏப்ரல் 10ம் தேதி இந்தப் புதிய ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அரசுடன் பிரதமர் கை எழுத்திடுகிறார் , ஆனால் அதற்கு முன்பு இந்திய விமானப் படையில் தலைமை அலுவலகத்தில் இருந்து 36 விமானங்களை வாங்குவதற்கு எந்தவொரு அதிகார பூர்வ கோரிக்கையும் தரப்பட வில்லை .அது மட்டுமல்ல 36 விமானங்களை, மேக் இன் இந்தியா இல்லாமலும் தொழில் நுட்பப் பரிவர்த்தனை இல்லாமலும் வாங்குவதற்கும் DAC ஒப்புதல் அளிக்கவே இல்லை. இது அப்பட்டமான விதி முறை மீறல் ஆகும். இதை நீதி மன்றம் கணக்கில் கொள்ள வில்லை.
36 விமானங்கள் விலை பற்றி நீதி மன்றம் கூறுகையில், இந்த விலை நிர்ணயம், புதிய விமானங்களின் அடிப்படை விலை, மற்றும் அதன் இதர கூடுதல் விலை பற்றிய ஒப்பீட்டு விபரங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்ததில் அது RFP, IGA எனப்படும் ஒப்பந்த நடைமுறைகளின் வழி காட்டுதல்படியே செய்யப் பட்டுள்ளது என்கிறது .
சுருக்கமாகச் சொல்வதானால் மத்திய அரசு தரப்பில் இந்தப் புதிய ஒப்பந்தம் பழைய ஒப்பந்தத்தை விட வணிக ரீதியில் அரசுக்கு லாபகரமானதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த புதிய விமானத்தில் இன்னும் பல போர்க் கருவிகளைப் பொருத்தித் தருவதாகவும், மேலும் விமானப் பராமரிப்பில் முன்பை விடப் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப் பட்டிருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்ல பட்டிருப்பதை நீதி மன்றம் அப்படியே ஏற்றுக் கொள்கிறது. மேலும் விலை ஒப்பீடு இந்த நீதி மன்றத்தின் வேலை இல்லை எனவும், இது பற்றிப் பல தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், மேலும் கூடுதலாக இது பற்றித் தாங்கள் ஏதும் கூற இயலாது என்றும் கூறுகிறது.
ஆனால் இந்த நீதி மன்றம் ஒப்பந்த தொகை 5.2 பில்லியன் என்ற அளவில் இருந்து 8.2 பில்லியன் அளவிற்கு ஏன் உயர்த்த பட்டது என்பது பற்றியோ, அது பற்றி கேள்வி எழுப்பிய பேச்சு வார்த்தைக் குழுவில் இருந்த 3 மூத்த அதிகாரிகள் பற்றியோ ஒன்றும் கூற வில்லை. இந்த மறுப்பைத் தெரிவித்த 3 அதிகாரிகளும் (இவர்கள் இந்த துறையின் நிபுணர்கள்) இட மாற்றம் செய்ய பட்டார்கள் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வில்லை. ஆனால் ஒரு CAG அறிக்கையை மட்டும் அது மீண்டும் மீண்டும் சுட்டி காட்டி உள்ளது. அது போன்ற ஒரு CAG அறிக்கை எங்கும் இல்லவே இல்லை. அது எங்கும் ஆவணப் படுத்த படவும் இல்லை.
ஆப்செட் காண்ட்ராக்ட் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப் பட்ட விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 2012 -ல் இருந்தே டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நீதி மன்றம், குறிப்பிடுகிறது. ஆனால் அது முகேஷ் அம்பானியின் வேறு ஒரு நிறுவனம். இந்தப் புதிய நிறுவனம் அனில் அம்பானியால் 2015-ல் இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் அவசரமாக துவக்கப் பட்டது என்பதை நீதி மன்றம் கவனிக்க வில்லை. மேலும் இது போன்ற ஆப்செட் காண்ட்ராக்ட் ஒவ்வொன்றும் பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதியும் இங்கே மீறப் பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
மேலே கண்ட தகவல்கள் அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தில் நீதி மன்றம் தலையிடத் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களின் அனுமானங்கள் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று கொள்ள முடியாது என்றும் சொல்லி உள்ளது.
நாங்கள் எந்த நீதி மன்ற விசாரணையும் கோர வில்லை, மாறாக CBI அல்லது SIT மூலமான சுதந்திரமான விசாரணைதான் கோரினோம். இதற்கான நெறிமுறை லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது , ஊழல் புகார்கள் குற்றத் தன்மையுடன் இருக்கும் போது FIR பதிவு செய்யப்பட்டு முறையான விசாரணை நடத்த பட வேண்டும் என்று அதில் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது . எங்கள் புகாரில் உள்ளபடி மிகப் பெரிய கமிஷன் கொடுக்க பட உள்ளது என்றும் அதற்கு வசதியாகவே ஆப்செட் காண்ட்ராக்ட் என்ற புதிய வழி முறை புகுத்தப் பட்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஆப்செட் காண்ட்ராக்ட்டில் சேர்க்க பட்டுள்ளது என்பதே எங்கள் புகாரின் முக்கிய அம்சம்.
மேற்கணட இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் எங்களுக்கு இநந்த் தீர்ப்பானது மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 32-ம் பிரிவைக் காரணம் காட்டி, இப்படியான அரசின் ஒப்பந்தங்களில் தலையிடும் அதிகார வரம்போ ,உரிமையோ நீதி மன்றங்களுக்கு இல்லை என்றே தீர்ப்பில் சொல்லி இருப்பதால், இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கு கொடுக்க பட்ட நற் சான்றிதழ் இல்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் புகாரில் சொல்லி உள்ளது போல இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட முறை மற்றும் சூழல்களை வைத்துப் பார்க்கும் போது இது ஒரு மோசமான ஒப்பந்தம். மேலும் இது நம் தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். நம் அரசிற்கு பெருத்த நஷ்டத்தை உண்டாக்கும். நம் பொதுத் துறை நிறுவனமான HAL ஐ மிக மோசமாகப் பாதிக்கும். இந்த ஒப்பந்தம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஆப்செட் காண்ட்ராக்ட் என்ற போர்வையில் மிக பெரும் தொகைகளை கமிஷன் கொடுப்பதற்காகவே உருவாக்க பட்டது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பானது முந்தைய போபோர்ஸ் ஊழல், பிர்லா சஹாரா ஊழல் போன்ற வழக்குகளில் வழங்க பட்ட தீர்ப்புகளைப் போலவே உள்ளது. இதைப் போல உயர் மட்ட அரசு நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களை எந்த குறுக்கீடுகளும் இல்லாத சுதந்திரமான விசாரணை நடத்தி தடுக்க நீதி மன்றங்கள் தயங்கவே செய்கின்றன .இது அந்த ஊழல்களை மூடி மறைக்கவே உதவுகிறது .ஆனால் மக்களின் மனதில் உள்ள ஐயங்களைப் போக்க வேண்டுமானால் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்.கூட்டு அறிக்கை முற்றியது .
#rafale #aviation #congress #france #armeedelair #dassault #rafaledeal #avgeek #patrouilledefrance #exercito #rahulgandhi #modi #aviationphotography #instagramaviation #america #airsoft #savegirlchild #tripletalaq #jnu #bope #azaadikiwapasi #tuesdaythoughts #deendayalupadhyay #karyakartamahakumbh #conginsultshindu #conginsultsram #arm #congressparsurgicalstrike #frenchairforce #bhfyp

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*