ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்!

உடல் நிலையில் சிக்கல்? –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்!

இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி

ரபேல் ஊழல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என அறிவித்துள்ளது.பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா பிரான்ஸ் நாட்டின்  டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் என் ஜினியரிங் என்ற அரசு நிறுவனத்தின் மூலமே இதுவரை விமான கொள்வனவு நடந்து வந்தது. ஆனால், விமான பரிவர்த்தனையில் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்துடன் இணைத்து பாஜக அரசு விமான கொள்வனவு செய்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில், இது தொடர்பாக பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வழக்கறிஞர் வினீத் கண்டா, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்:-

“ ரபேல் போர் விமானம் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது “ என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.இந்த தீர்ப்பை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி இந்த வழக்கில் தலையிட முடியாது என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே தவிற ஊழல் பற்றி அது எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. ஆனால், ஸ்பெக்டரம்  விவகாரம் கூட அரசின் கொள்கை முடிவுதான். ஆனால், பாஜக அழுத்தங்களுக்கு  பயந்த அப்போதைய காங்கிரஸ் அரசு பாராளுமன்ற விசாரணைக்குழுவை அமைத்தது. ஆனால், அதே அரசின் கொள்கை முடிவுகளின் படி நடந்த ரபேல் ஊழல் தொடர்பாக இதுவரை பாராளுமன்ற விசாரணைக் குழு அறிக்கை அளிக்கவில்லை. என்பதோடு அரசின் பிற துறைகள் இது பற்றி மவுனமாகவும் இருக்கிறது.

#RafaleCase #SupremeCourt ##Rafale_scam #ரஃபேல்_ஊழல் #போர்விமான_ஊழல்

தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்!

”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*