ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்!

கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா!

#Chennai_IIT_caste_discriminationவெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி?

பாசிஸ மோடியின் ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுல்காந்திக்கு உண்டு. அவர் பிரதமராக வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த விழாவுக்கு வந்திருந்தார். சிலை திறப்பின் பின்னர் கலைஞர் நினைவில்லம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

அப்போது:-

 

“சோனியாகாந்தி அவர்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஒரு முறை சொன்னார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருப்பவர்” கருணாநிதி என்று சொன்னார். கருணாநிதியின் மகனாக நானும் அதையே சொல்கிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் உறுதியாக நான் இருக்கிறேன்.

1980 –ஆம் ஆண்டு தலைவர் கலைஞர்கள் அவர்கள் இந்திராகாந்தி பிரதமராக வரவேண்டும் என்று குரல் கொடுத்தார். நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார். 2004-ஆம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா அவர்களை வரவேற்றுப் பேசிய கலைஞர் “இந்திராவின் மருமகளே வருக இந்தியாவின் திருமகளே வெல்க” என்றார். இன்று 2018-கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் முழங்குகிறேன். அவருடைய மகனாக நான் தமிழகத்திலிருந்து ராகுல்காந்தி அவர்களின் பெயரை முன்மொழிகிறேன். ராகுல்காந்தி அவர்களே வருக. நாட்டுக்கு நல்லாட்சி தருக, நாசிச, பாசிஸ மோடி அரசை  வீழ்த்தும் வல்லமை ராகுல்காந்திக்கு உண்டு,. ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம்.அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்துவோம். ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம் என்று உறுதி ஏற்கிறேன்” என்றார்.

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதங்கள் நடந்து  வந்த நிலையில், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர்களை மேடையில் வைத்துக் கொண்டு ராகுல்காந்தி அடுத்த பிரதமர் என திமுக தலைவர் முன்மொழிந்திருப்பது இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

#Sadistpm #StatueofKalaignar #Kalaignarseithigal #ChandrababuNaidu   #MkStalin #saddistPM

தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி!

எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு! #Periyar_Kuthu

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*