விஷால் கைது –பின்னணியில்  ஆளும்கட்சி!

பாஜகவுக்கு பயந்து கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்த அதிமுக!

18,000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்த காங்கிரஸ் அரசு –மோடிக்கு நெருக்கடி!

ஓ.பன்னீசெல்வம் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட்!

சபரிமலையில் அய்யப்பனை வழிபட்ட 4 திருநங்கைகள்!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு தரப்பினர் பூட்டுப் போட்ட நிலையில், இன்று  தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற நடிகர் விஷாலை  போலீசார் கைது செய்தனர். அதே நேரம் நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டுப் போட்ட பாரதிராஜா, குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைவராக வந்தது முதல் அவருக்கு எதிராக ஒரு தரப்பினர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தனர். எஸ்.வி.சேகர், பாரதிராஜா, உள்ளிட்டோரும் அம்மா தொலைக்காட்சியின் நிர்வாகி சக்ஸ்சேனாவும் திரண்டு  விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை, சக உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர். சங்கத்தின் வங்கிக் கணக்கில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் மாதா மாதம் வெளியாவதால், சிறிய படங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றனர். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விஷால் மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்தநிலையில், சென்னை தியாகராகய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகம் முன்பு திரண்ட தயாரிப்பாளர்கள், கேட்டிற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சாவியை முதலமைச்சரிடம் கொடுத்து, விஷாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்போவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ள நிலையில், இளையராஜாவை வைத்து பணம் சம்பாதிக்க விஷால் நினைப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.இன்று முதல்வரை சந்தித்த பாரதிராஜா உள்ளிட்டோர் தயாரிப்பாளர் சங்க சாவியை முதல்வரிடம் கொடுத்து இந்த பஞ்சாயத்தை முடித்து வைக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்கள். உண்மையில்  விஷால் தினகரனுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாகக் கூறி, விஷாலை பதவியில் இருந்து இறக்குவதற்கு ஆளும் அதிமுக களமிரங்கி உள்ளது.

அம்மா  தொலைக்காட்சி நிர்வாகி சக்ஸ்சேனா, எஸ்.வி.சேகர், பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து தமிழக அரசின் சம்மத்துடனும், போலீஸ் துணையுடனும் விஷால் கைது அரங்கேற்றியுள்ளார்கள்.

#vishal_arrest #விஷால்_கைது #vishal_arrest

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*