வேதானந்தாவுக்காக எடப்பாடி நடத்திய என்கவுன்டர் கொலைகள்!

திருச்சியை உலுக்கிய #கருஞ்சட்டைப்_பேரணி

எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- அற்புதம்மாள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரை தமிழக போலீஸ் சுட்டுக் கொன்ற நிலையில், அது தொடர்பான பிரேதபரிசோதனை அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதானந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய பல்வேறு பாதிப்புகள் காரணமாக தூத்துக்குடி மக்கள் ஆலையை மூடக்கோரி போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி கடந்த மே 22-ம் தேதி நடந்த பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது உலகம் முழுக்க பல அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், 13 பேரின் உடற்கூறாய்வு அறிக்கையை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அதில், உயிரிழந்த 13 பேரில் 12 பேருக்கு தலை அல்லது மார்புபகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது. பாதி பேர் பின்பக்கம் இருந்து சுடப்பட்டிருக்கிறார்கள்கொல்லப்பட்டவர்களில் மிகக்குறைந்த வயதான ஸ்னோலின் பின் கழுத்தில் பாய்ந்த தோட்டா வாய்வழியாக வெளியில் வந்திருக்கிறது. கழுத்தில் பாய்ந்த குண்டு ஸ்னோலினின் உயிரை பறித்திருக்கிறது. ஜான்சி காது வழியே குண்டு பாய்ந்திருக்கிறது. 34 வயதான மனோரஞ்சன் நெற்றியில் குண்டு பாய்ந்திருக்கிறது. மிக நெருக்கமாக நின்று என்கவுண்டர் செய்யப்படுவது போல பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் படுகொலைகள் தொடர்பான பிரேதபரிசோதனை அறிக்கையை இறந்தவர்களின் உறவினர்களிடம் கூட எடப்பாடி பழனிசாமி அரசு அளிக்கவில்லை. வேதாந்தா நிறுவனத்திற்காக போலீசை வைத்து தூத்துக்குடியில் போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் நாளிதழில் பார்த்தே தெரிந்து கொண்டேன் என்றும் சொல்லியிருந்தார்.
நடந்திருப்பதை திட்டமிட்ட மிக மோசமான படுகொலைகள். இவைகள் தற்செயலாக நடந்தவை அல்ல. முன்கூட்டியே திட்டமிட்டு நடந்த கொலைகள் என்பதையே பிரேதபரிசோதனை அறிக்கைகள் கூறுகின்றன. இந்த கொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

#ஸ்டெர்லைட் #Sterlite #Sterlite_Murders #தூத்துக்குடி_கொலைகள், #sterlite_vedanta #sterlite_murders #vedanta_murders

கமலை கூட்டணிக்கு அழைத்த ஒரே கட்சி – தனித்து போட்டியிட முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*