18,000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்த காங்கிரஸ் அரசு -மோடிக்கு நெருக்கடி!

ஓ.பன்னீசெல்வம் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட்!

சபரிமலையில் அய்யப்பனை வழிபட்ட 4 திருநங்கைகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக பதவிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு பதினெட்டாயிரம் கோடி அளவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவிடம் இருந்து அந்த மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வந்தது. இந்துத்துவத்தின் இதயநாடிகள் என்று இந்த மாநிலங்களை குறிப்பிடலாம். அந்த அளவுக்கு பண்பாட்டு ரீதியாக மிகவும் பின் தங்கிய மாநிலங்கள். மதம், சாதியை வைத்து இம்மாநிலங்களில் எளிதாக அரசியல் செய்ய முடியும் என்ற நிலையில் தான் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் காங்கிரஸ் பாஜகவிடம் இருந்து இந்த மாநிலங்களை தங்கள் வசமாக்கிக் கொண்டது.
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூகேஷ் பாகேல் ஆகியோர் நேற்று முன் தினம் பதவியேற்றனர். இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வென்றால் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். அதன்படி மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் 2 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்தார்.இதனைத் தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடியை விவசாயிகள் வரவேற்றுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 18,000 கோடி விவசாய கடன்களை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களிலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளாதால் பாஜக ஆளும் மாநிலங்களில் கடன் தள்ளுபடி கோரிக்கை அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று மாநிலங்களில் பதவியேற்ற காங்கிரஸ் அரசு உருவாக்கிய நெருக்கடியைத் தொடர்ந்து பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

#BJP_Fails #விவசாயக்கடன்கள் #கடன்_தள்ளுபடி

ராகுலை முன்மொழிந்த ஸ்டாலின் -வதந்தி பரப்பும் ஊடகங்கள்-உண்மை என்ன?

கமல்நாத் பாணியில் டெல்டா விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வாரா பழனிசாமி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*