1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை!

#SadistModi. என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது?

ஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..

ன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1984-ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்க்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான பெரும் வன்முறை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். பலநூறு பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

இந்த வன்முறைகள் இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். அப்போதைய எம்.பி சஜ்ஜன் குமார் மீது மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரி , விகாஸ்புரி காவல்நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சோகன்சிங், அவதார்சிங் என்ற இருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஜானக்புரி காவல்நிலையம் செய்த வழக்கில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டார் சஜ்ஜன்குமார். மறுநாள் குச்சரண் சிங், என்ற சீக்கியர் கொல்லப்பட்ட வழக்கிலும் சஜ்ஜன்குமார் சந்தேகநபராக சேர்க்கப்பட்டார்.

விசாரணை நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கவுன்சிலர் கோஹர் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் கோஹர் உள்ளிட்டோருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் சஜ்ஜன்குமாரையும் குற்றவாளி என அறிவித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

#1984anti_Sikh_riots # sikhs riot #Assassination_of_Indira_Gandhi #சீக்கியர்_வன்முறைகள் #இனப்படுகொலை

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்!

கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*