#Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி?

தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி!

எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு! #Periyar_Kuthu

ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்!

உடல் நிலையில் சிக்கல்? –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்!

இந்தியாவில் இருக்கும் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றான சென்னை ஐ.ஐ.டியில் சைவ மாணவர்கள், அசைவ மாணவர்கள் என்று  மாணவர்களிடம் பிரிவினையைக் காட்டியுள்ளது சென்னை ஐ.ஐ.டி.

தீண்டாமையை பாவச்செயல் என்கிறது பள்ளிப்பாடப்புத்தகம். நமது அரசியல் சாசனமோ தீண்டாமையை வன்கொடுமை என வரையறுக்கிறது. தீண்டாமையை, சாதி வேற்றுமை இந்தியாவில் கடுமையான தண்டனைக்குரிய குற்றம். சாதிக் கொடுமைகளை கடுமையாக தண்டிக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிலவில் உள்ள நிலையில், சென்னை ஐ.ஐ.டியில் சைவ உணவு உண்ணும் மாணவர்களுக்கு தனி வரிசையும், தனி கவுண்டரும் அமைக்கப்பட்டுள்ளதை விளக்கமாக எழுதியும் ஒட்டியுள்ளது நிர்வாகம்.

நீண்டகாலமாகவே குறிப்பிட்ட ஒரு சாதியினர் பிற சாதியினர் மீது பாரபட்சம் காட்டி வருகின்றனர். சாதி இறுக்கமாக பின்னப்பட்ட இந்திய சமூகங்களில் சாதி  வேற்றுமைக்கு கல்வி நிறுவனங்களும் விதிவிலக்கில்லை. என்றாலும், கல்வி நிறுவனமே சாதிப்பாகுபாட்டில் இயங்குவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்தியாவுல் உயர்கல்விக்கு என்று இயங்கும் இந்த  நிறுவனங்கள் மக்கள் வரிப்பணத்தில்தான்  இயங்குகின்றன. லட்சங்களில் ஊதியம் பெறும் குறிப்பிட்ட சாதியினர் மக்கள் வரிப்பணத்தில்தான் ஊதியமும் பெறுகின்றனர். சைவ சாதியினர், அல்லது சைவ உணவு உண்ணுவோர் கொடுக்கும் வரிப்பணத்தில் ஐ.ஐ.டி உயர்சாதியினர் ஊதியம் பெறவில்லை. அந்த நிறுவனமும் அனைத்து இந்திய மக்களும் கொடுக்கும் வரிப்பணத்தில்தான் இயங்குகிறது.

இந்நிலையில், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகள், சாதி துவேஷங்களை அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தில் சில உயர்சாதியினர் அமல்படுத்தி வருவது பொதுவெளியில் அதிவலைகளை உருவாக்கி இருக்கிறது.

#chennai_IIt_cast #Caste_system_in_chennai_iit # caste_discrimination #சாதி_பாகுபாடு #சென்னை_ஐ_ஐ_டி #உயர்கல்வி_நிறுவனங்களில்_சாதி

இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி

தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்!

”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*