#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

 அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா?

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு?

அப்பாவிப்பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம்  செய்தி தொகுப்பு

கஜா புயல் 12 மாவட்டங்களை அடியோடு சிதைத்துப் போட்ட நிலையில், மத்திய அரசு 1,146 கோடி ரூபாயை மட்டும் கஜா புயல் பாதிப்பிற்கு ஒதுக்கியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி இரவு கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கரையைக் கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்தன.

கஜா புயல் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.

அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அளித்தனர்.

கஜா புயல் பாதிப்பிற்காகத் தமிழகத்திற்கு ரூ.353 கோடி நிதியை கடந்த 1-ம் தேதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த நிவாரணத் தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கியது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழுக்கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தேசிய பேரிடர் நிதியில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.1,146.12 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்த தொகையில் பத்து சதவீதம் பணத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

#கஜாபுயல் #காவிரிடெல்டா #Gaja_Cyclone

தெரியாமல் தவறிழைத்த இளைஞர் இறந்தார்- தெரிந்தே தவறிழைத்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*