#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது?

 ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..

இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்!

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்!

கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா!

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்  சோனியாகாந்தி, இப்போதைய தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சிலையை வைத்த பின்னர் நடபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது  “தனது வாழ்நாளில் இந்த நாளை மறக்க முடியாத நாள்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்.

“பரம்பரை மன்னர் மனநிலையுடன் நடந்து கொள்கிறார் மோடி. தன்னை ரிசர்வ் வங்கியாகவும், தன்னை வருமானவரித்துறையாகவும், தன்னையே உச்சநீதிமன்றமாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறார்.கஜா புயல் பாதிக்கப்பட்ட எங்கள் தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. அவர் இரு சேடிஸ்ட் பிரதமர். சேடிஸ்ட் மனோநிலை கொண்ட பிரதமராக மோடி இருக்கிறார். ராகுல் நல்லாட்சி தரவேண்டும்” என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த உரை இந்தியா முழுக்க கவனிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய ஊடகங்களிலும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஒரு பிரதமரை சேடிஸ்ட் என்று சொல்லலாமா? என்று பாஜக உள்ளிட்ட இந்துத்துவ ஆர்வலர்கள் கேள்விகள் எழுப்பினார்கள்.

சேடிசம் என்ற  வார்த்தையின் தமிழ் பொருளை  துன்பூட்டுவேட்கை என்கிறது இணையம். மற்றவரை துன்புறுத்தி இன்பம் அடைதல். இது பிரதமர் மோடிக்கு பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தும் என்பதைத்தான் அவரது நான்காண்டுகால ஆட்சி நிரூபிக்கிறது.

#

2016 நவம்பர் 8-ஆம் தேதி தீடிரென இரவில் புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மக்கள் திண்டாடிப்போனார்கள்.  பெரும் கோடீஸ்வரர்கள், கருப்புப்பண முதலைகளை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மோடி அரசு விளக்கம்.  சொன்னது. ஆனால், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோடீஸ்வரர்கள் எந்த இடர்களையும் சந்திக்கவில்லை.ஆனால், வீடுகளில் சில ஆயிரம் ரூபாய்களை சேமித்து வைத்திருந்த ஏழைகள் பெருந்துன்பங்களை அனுபவித்தார்கள். 150 அப்பாவி பொதுமக்கள் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தார்கள். பிரதமர் மோடியோ 50 நாட்களில் நிலமை சரியாகும் என்றார், பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி என்று தொடர்ந்து பேசி வந்தனர். இப்படி மக்களின் துன்பத்தை மகிழ்ச்சியாக பிரஸ்தாபித்து வந்தவரை #SadistModi என்று சொன்னால் அது அரசியல் ரீதியாக பொருந்தும் அல்லவா?

#

மருத்துவக்கல்விக்கு நீட் தேர்வைக் கொண்டு வந்ததால் மனுடைந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து நீட் தேர்வால் நன்மை என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மாணவர்கள் கூட மருத்துவக்கல்விக்குள் நுழைய முடியாத நிலை நீடிக்கிறது.

#

கஜா புயல் பாதிப்புகள் வரலாறு காணாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இழப்பீடு இதுவரை அறிவிக்கவில்லை. வருத்தம் கூட தெரிவிக்கவில்லை மோடி. அது போல தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை. அதை கேட்டுப்பெறும் திராணி கூட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை.

இப்படி தமிழக மக்கள் துன்புறுத்தப்பட்டு அதில் மகிழ்கிறவர்களாக பிரதமர் மோடி இருக்கிறார்.

 

#StatueOfKalaignar #Sadistpm #StatueofKalaignar #Kalaignarseithigal

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*