அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மக்களவை, மாநிலங்களவையில் இருந்து  அதிமுக திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். மேகதாது அணை விவகாரத்தில் அமளியை ஏற்படுத்தியமைக்காக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த முறை தெலுங்கு தேசம் கட்சி ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்த  தீர்மானத்தை அவைக்கு கொண்டு வர விடாமல் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வர வேண்டும் என்று அவையை முடக்கியது. அதாவது காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு கொண்டு வராது என்பது அதிமுகவுக்கு தெரியும். மக்கள் மன்றத்திலும் தமிழக அரசு மட்டத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்தைக் கொண்டு வர போதுமான அழுத்தத்தை உருவாக்காத அதிமுக நம்பிக்கையில்லா  தீர்மானத்திலிருந்து பாஜகவைக் காப்பாற்ற ஒரு கருவியாக காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சனையை கையாண்டது. இதனால் காவிரி மேலாண்மை வாரிய விவகாரதில் தமிழகத்தை ஆளும் கட்சியே உறுதியாக இல்லை என்ற நிலை உருவானது. இறுதியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்து பாஜகவை வெற்றி பெறச் செய்தது.

முத்தலாக் மசோதாவிலும் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் லோக்சபாவில் பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சென்ற முறை காவிரி மேலாண்மைவாரியத்தை வைத்து பாஜகவை ஆதரித்த அதிமுக, இம்முறை மேகதாது அணை விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகளிடம் இருந்து பாஜகவை பாதுகாக்கிறது. அதிமுகவினரின் இந்த அணுகுமுறை குறித்து தன் பேச்சில் குறிப்பிட்ட ராகுல்காந்தி:-

“அதிமுக எம்.பிக்கள்  ஏன் இப்போது நான் பேசுவதை தடுக்கப் பார்க்கிறார்கள். அதிமுகவினர் மோடியை பாதுகாப்பதற்காகவே லோக்சபாவில் இடைஞ்சல்  செய்கிறார்கள்.அதிமுக எம்.பிக்களின் பின்னாள் ஒளிந்து இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிரித்துக் கொண்டிருக்கிறார்.”என்ற போது கடும் அமளியில் ஈடுபட்டு அவையை குழப்பி விட்டு பின்னர் மதிய உணவுக்குச் சென்று விடுகிறார்கள்.

இப்போது மேகதாது அணை விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் பாஜகவை  தாக்காதவாறு பாதுகாத்து வருகிறார்கள். இதை தன் பேச்சில் ராகுல் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். இன்னொரு பக்கம் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் வரும் போது எதிர்த்து வாக்களிக்கக் கூடாது. ஆதரித்து வாக்களிக்க வேண்டும். என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளநிலையில்,

இன்று வழக்கம் போல மக்களவை, மாநிலங்களவை கூடியதும் மேகதாது அணை பிரச்சனையை எழுப்பினார்கள். இதையொட்டி மக்களவையில் உள்ள அதிமுக உறுப்பினர்கள் 5 பேர் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அது போல மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும், திமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் ஒரு நாளுக்கு சஸ்பெண்ட் ஆகி உள்ளார்கள்.

மாநிலங்களவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையை முடக்கும் செயலில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதாக சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார்கள்.

video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது!

வலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்!

எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*