சபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்!

சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

கேரளமாநிலத்திற்கு ஒரு நாள் விஜயமாக வந்த பிரதமர் மோடி கொல்லம் பைபாஸ் சாலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது,

“கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வளர்ந்து வருகிறது. 142-வது இடத்தில்  இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலகிலேயே இது வேகமாக ஆக்கபூர்வமான வளர்ச்சி ஆகும்.

சபரிமலை பெண் வழிபாட்டு விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை மிகமோசமானது. இடதுசாரிகள் இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகத்தை மதிக்க மாட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த அளவு வெறுப்பை இந்து மதத்தின் மீது வைத்திருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் அதிர்ச்சிகரமாகவும், மோசமாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடத்தை கடைபிடிக்கிறது. பல்வேறு நிலைப்பாடுகளுடன் குழப்பமாக உள்ளது காங்கிரஸ்.அவர்கள் பார்லிமெண்டில் ஒன்றைக் கூறுவார்கள்.பத்தனம்திட்டாவில் ஒன்றைக் கூறுவார்கள். அவர்களின் இரட்டை வேடமும் அம்பலமாகி உள்ளது. இளைஞர்களின் சக்தி, ஏழைகளை புறக்கணிப்பது மக்களை ஏமாற்றுவதில் இரு கட்சிகளும் ஒரு நாணையத்தின் இரு பக்கங்கள்”என்று பேசினார்.

 #SabarimalaIssue #PMModi #KeralaGovernment #WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*