இளையராஜா ‘75’ பிரமாண்ட ஏற்பாடுகள்!

ஜாக்டோ ஜியோ போராட்டமும் சமூக ஊடகங்களும்-அ.மார்க்ஸ்

தமிழிசையை அவமானப்படுத்திய பாஜக ஆதரவு தினமலர்!

இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக சென்னையில் நடைபெற இருக்கும் ‘இளையராஜா 75’ என்ற கலைவிழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு தடை கோரி மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் ஆன நிலையில், இன்று நிகழ்வுக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.
பிப்ரவரி 2,3 தேதிகளில் இளையராஜாவின் 75 வயது பிறந்தநாளை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்தது .சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த விழா மூலம் வசூலாகும் தொகை சுமார் 10 கோடி அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்க பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் த்யாரிப்பாளர் சங்கம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வருவதால் இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முடியாது என தயாரிப்பாளர் சங்கம் கூறியது.
இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் .இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இளையராஜா கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஹங்கேரியில் இருந்து இசைக்கலைஞர்கள் சென்னைக்கு வந்து சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.இது தொடர்பாக ஊடகவியலாளர் கோலப்பன் முகநூலில் எழுதியுள்ள பதிவு:-
//ஹங்கேரியில் இருந்து இசைஞானிக்காக

இசைஞானியின் 75-ஆம் பிறந்தநாளையொட்டி நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் இருந்து வந்திருக்கும் ஆர்க்கெஸ்டாவினர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

ஏற்கெனவே இளையராஜாவின் இசைக்குழுவினர் வாசித்தப் பின்னணி இசையில் வயலின், வயோலா மற்றும் செல்லோ வாத்தியங்களை மட்டும் அவர்கள் வாசிக்கிறார்கள். எல்லா நோட்ஸ்களையும் இசைஞானி எழுதியிருப்பதால் ஏதோ அவர்கள் பல்லாண்டுகளாக அப்பாடல்களுக்கு வாசாித்தது போல் வாசிக்கிறார்கள்.

பூமாலையே தோள் சேரவா, ஆனந்தராம் கேட்கும் காலம், நீ எங்கே என் அன்பே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, தாலாட்டுதே வானம் ஆகிய பாடல்களுக்கு அவர்கள் வாசிப்பதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவமே தனி. அத்துடன் 15 கல்லூரி மாணவர்களையும் அவர் பாட வைத்திருக்கிறார்.

புடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ரா ஹே ராம் திரைப்படத்தில் இருந்து இளையராஜாவுடன் பணியாற்றுவதாக தெரிவித்தனர். ஹே ராமின் இசை ஹங்கேரியில்தான் பதிவு செய்யப்பட்டது.

“அவர் எல்லா விதமான இசையையும் திறந்த மனதுடன் அணுகிறார்,” என்றார் அக்குழவின் தலைவர் லாஸ்லோ கோவாக்ஸ்.”ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கியிருந்தாலும் ஒரு பாடலைப் போல் இன்னொன்று இல்லையென்றும்,” தெரிவித்தார்.அதை ஆங்கில ஹிந்துவுக்காக பதிவு செய்தேன்.
என்று எழுதியுள்ளார்.

#ilaiyaraja_75 #raja75 #isaigani75

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*