உத்தரபிரதேசத்தில் மாயாவதி-அகிலேஷ்யாதவ் கூட்டணி அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி அறிவித்துள்ளார். இருகட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநில தேர்தல் வெற்றிகளைப் பொறுட்த்துதான் மத்தியில் யார் ஆட்சியமைப்பார்கள் என்பது முடிவாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாதி கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் பாஜக பெரும்பான்மை தொகுதிகளை வென்று மோடி பிரதமராகவும் அது வழி வகுத்தது. ஆனால், இப்போதைய தேர்தலில் அது சாத்தியமில்லை. காரணம், பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர் நடந்த ஒரு தேர்தலில் கூட பாஜக வெல்ல முடியவில்லை. மாயாவதி- அகிலேஷ்யாதவ் கூட்டணிதான் வென்று வருகிறது. இந்நிலையில், அதே கூட்டணியை மக்களவை தேர்தலிலும் தொடரும் என இருவரும் அறிவித்தனர்.
இன்று கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிட்டனர். இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்றும், ரேபரேலி, அமேதி உள்ளிட்ட இரு தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கப்படுகிறது என்றும் இருவரும் அறிவித்துள்ளனர்.
இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது:-
“ சமஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கடசி என இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். ரேபரேலி, மற்றும் அமேதி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கிறோம். அவர்களுக்கு இங்கு செல்வாக்கில்லை. காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் எங்களுக்கு வர வாய்ப்பில்லை என்பதால் அவர்களுக்கு இதற்கு மேல் தொகுதிகள் ஒதுக்க முடியாது. காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இணையாவிட்டாலும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் நாங்கள் எங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை. ”என்றார் அகிலெஷ் யாதவ்.
பின்னர் பேசிய மாயாவதி:-
“பாஜக போலவே காங்கிரஸ் கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். அவர்களால் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை. கூட்டணியை சிதைக்கும் வேலையை நாங்கள் செய்ய விரும்பவில்லை. எங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பு மோடி அமித்ஷாவின் தூக்கத்தைக் கெடுக்கும்”என்றார்.
மாயாவதி பிரதமராக தனது ஆதரவை வழங்கியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

கொடநாடு கொள்ளை கொலைகள் – பத்திரிகையாளர் மீது வழக்கு!

சிபிஐ இயக்குநரை அதிரடியாக நீக்கம் எப்படி ஏன்?

எனக்கும் இந்தி தெரியாது-கனிமொழி!

சபரிமலை போராட்டம் -பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்க முடியாது -சோனியாகாந்தி!

பாஜகவுக்கு இரு பிரதமர் வேட்பாளர்கள் வடக்கில் ராமர்- தெற்கில் அய்யப்பன் ஆனால்?

 
 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*