உத்தரபிரதேசம் -மும்முனைப்போட்டி-வெல்லுமா காங்?

சபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்!

சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாத நிலையில், ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநில தேர்தலில் எப்படியும் வென்று விட வேண்டும் என்ற வேகத்துடன் களமிரங்குகிறார்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் உத்தரபிரதேச மாநிலம் பெரும் பங்கு வகிக்கப் போகிறது. 2014 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுமே தனித்தனியாக போட்டியிட்டதால் பாஜக எளிதில் வெற்றி பெற முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் பாஜகவால் வெற்றி பெறமுடியவில்லை. மாயாவதி, அகிலேஷ்யாதவ் கூட்டணியை பரீட்சித்துப் பார்த்தவர்கள் அதன் பயன்களைக் கண்டு அதே கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலுக்கும் விரிவு படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட்டணி அறிவித்த இருவரும் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், சோனியா, ராகுல் மீதான மரியாதை காரணமாக அமேதி மற்றும் இன்னொரு  தொகுதியில் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

தனித்து விடப்பட்ட காங்கிரஸ் உத்தரபிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. உத்தரபிரதேசத்தை 13 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டத்திலும் ராகுல் தனியாக வேலை செய்ய தீர்மானித்துள்ளார். முதலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருந்து பிப்ரவரி மாதம் தனது பிரச்சாரத்தை ராகுல் துவங்குவார் எனத் தெரிகிறது.

வெளிநாடு சென்றுள்ள ராகுல் இது பற்றி பேசும் போது:-

“நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் பலம், மதிப்பு பற்றி அகிலேஷும், மாயாவதியும் தவறாக கணித்து விட்டனர். இதற்காக நாம் சோர்ந்து போக தேவையில்லை. வெற்றியை நோக்கி தீவிரமாக வேலை செய்வோம்”என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மும்முனைப்போட்டி உருவாகி உள்ளது. இது நிச்சயம் கடந்த முறை போல பாஜகவுக்கு லாபமாக இருக்காது. ஆனால்,  நிச்சயம் காங்கிரஸுக்கு ஆதாயமாக இருக்குமா என்பதுதான் கேள்விக்குறியே?

#Uttar_Pradesh_2019_Election #Lok_saba_Elaction #uttarpradesh #உத்தரபிரதேசம்

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*