எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா?

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞர் தெரியாமல் பெண் ஒருவருக்கு ரத்தம் கொடுக்கிறார். தனக்கு எச்.ஐ.வி இருபப்து தெரிந்ததும். அவர் மருத்துவமனைக்கு அதை தெரிவித்து என் ரத்தத்தை யாருக்கும் ஏற்ற வேண்டாம் என்கிறார். ஆனால், மருத்துவமனையோ அந்த ரத்தத்தை சாத்தூருக்கு அனுப்பி விடுகிறது. அந்த ரத்தம் தான் அப்பாவி கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டது.

சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் சிக்கும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான அந்த இளைஞர் குற்ற உணர்வில் விஷமருந்தி மருத்துவமனையில் சேர்க்கபப்டுகிறார். பின்னர் ரத்த வாந்தி எடுத்து கொடும் விஷம் காரணமாக இறந்து விட்டார் என மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் கூறுகிறார். இது பல சந்தேகங்களை உருவாக்குகிறது.

அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்த வழக்கில் அவர் இறந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு இருந்திருக்கலாம். இருக்கவே வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை விட ரத்தம் கொடுத்த இளைஞர்தான் இந்த சம்பவத்தின் அழிக்க முடியா சாட்சியம் என்னும் நிலையில்,

அவர் உறவினர்கள் எழுப்பிய சந்தேகங்களால், அரசு அவரது பிரதேச பரிசோதனைக்கு வெளி மாவட்ட மருத்துவர்கள் மூவரை நியமித்திருக்கிறது., இது எத்தனை அபத்தம் பாருங்கள், அவருக்கு யாரும் விஷம் கொடுது கொன்றதாக சொல்லவில்லை. விஷயமருந்தியவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்பது குற்றச்சாட்டு. இப்போது பிரேத அறிக்கையில் விஷம் அவர் உயிரை பறித்து விட்டது என்று வரவிருக்கிறது. கேள்வி அதுவல்ல விஷம் அவர் உயிரை பறிக்காமல் ஏன் காப்பாற்றவில்லை என்கிற கேள்விக்கு எந்த வகையில் இந்த பரிசோதனை அறிக்கை விடையாக அமையும்.

#Tamilnadu_Health_Department #Hospital_ Sivakasi #தமிழக_சுகாதாரத்துறை #கர்ப்பிணிப்பெண்ணுக்கு_ஹெச்_ஐ_வி_ரத்தம்,

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு?

அப்பாவிப்பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம்  செய்தி தொகுப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*