கலவரக்காரர்களுக்கு எதிராக அவசரச் சட்டம்-கேரள முதல்வர் அறிவிப்பு!

கேரளத்தில் கலவரங்களில் ஈடுபட்ட சங்கப்பாரிவார குழுவினரை ஒடுக்க புதிதாக அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், பெண்கள் வழிபாடு நடத்தக் கூடாது என பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் கூறி வருகிறது. பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெரும் கலவரங்களை நடத்தின. சுமார் 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல கோடி ருபாய் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கேரள சபரிமலை விவகாரத்தில் பாஜகவின் கலவர அஸ்திரங்கள் எடுபடவில்லை. மாறாக கேரள மக்களிடம் மிகப்பெரிய அவப்பெயரை பாஜகவுக்கும், இந்துத்துவ அமைப்புகளும் பெற்றுக் கொடுத்திருக்கும் நிலையில்.  கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும் போது “ கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயல்கிறது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக கலவரங்களில் ஈடுபட்டவர்களில் 91.71% பேர் சங்கப்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இதில் மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கவியலாளர்கள் மீதான தாக்குதல், கட்சி அலுவலகங்கள், பொது மக்கள், பொதுச்  சொத்துக்கள், தனிநபர் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும். இழப்பீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களிடம் அதனை வசூலிக்கவும் சிறப்புச் சட்டம் இயற்ற உள்ளோம்.
#WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,
மேலும் வாசிக்க,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*