கழுதை பால் சோப் –தமிழர்களிடம் அமோக ஆதரவு!

சபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்!

சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

கழுதை பாலில் தயாரான சோப்புக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக பெண்கள், மற்றும் குழந்தைகள் நலத்துறை  தெரிவித்துள்ளது.

சண்டிகரில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை சார்பில் பொருட்காட்சி நடந்து வருகிறது. மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இதை துவங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் முதன் முதலாக கழுதை பாலில் தயாரான சோப் விற்பனைக்கு வந்துள்ளது. நூறு கிராம் எடையில் தயாராகி உள்ள கழுதைப்பால் சோப் 499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது பற்றி சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான பூஜா கவுல் கூறும் போது:-

“ கழுதைப் பாலுக்கு பல மருத்துவக்குணங்கள் உள்ளன. இது வயது முதிர்தல், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் குணம் கொண்டது.பாக்ட்ரியா தொற்றுகளில் இருந்தும் இது காப்பாற்றும்.  இதனால் கழுதைப்பால் இயல்பாகவே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. லிட்டர் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கழுதைப்பாலில் தயாரிக்கும் சோப்பும் கூடுதல் விலையோடுதான் விற்பனை செய்யும் நிலை உள்ளது. எங்கள் தயாரிப்புகளுக்கு தமிழகம் ,கேரளம் போன்ற தென் மாநிலங்களில் பெரும் வரவேற்பு உள்ளது.கழுதையின் பயன்களை அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

#Health_benefits_of_donkey_milk #Donkey_soaps

 

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*