கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

கொடநாடு கொலைகள்- ஷாயன், மனோஜ் கைது உயிருக்கு ஆபத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவவங்களில் தமிழக முதல்வர் பழனிசாமியின் பெயர் அடிபடும் நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.

 

திமுக அளித்துள்ள மனு மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இன்று ஆளுநரைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அச்சந்திப்பின் பின்னர் “ஐ.ஜி.ஒருவரின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் “என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் எத்தனையோ மனுக்களை ஆளுநரிடம் கொடுத்தார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். அப்படி ஸ்டாலின் கொடுத்த ஒரு மனு மீது கூட உருப்படியான எந்த நடவடிக்கையும் ஆளுநர் எடுக்கவில்லை. இப்படி ஆளுநரிடம் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எதுவும் இல்லாத நிலையில் நீதிமன்றத்திலும் திமுக பல விஷயங்களுக்காக   வழக்குத் தொடுத்ததும் உண்டு.

 

உண்மையில் ஆளுநர் தமிழக அரசு மீது பல காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கமாட்டார். முதலாவது காரணம் பன்வாரிலால் புரோகித் மோடியின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. மத்தியில் ஆளும் பாஜகவின் நலன்களுக்காகவே அவர் தமிழகத்தில் உள்ளார். மேலும், இந்த மைனாரிட்டி அரசை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கும் உண்டு.

 

ஒரு வேளை பன்வாரிலால் புரோகித் கொட்நாடு கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் மாணவிகளை பாலியல் புரோக்கிங்கில் ஈடுபத்திய குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலா தேவி மூலமாக கவர்னர் பழிவாங்கப்படுவார். நிர்மலா தேவி  விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஆளுநர் மாளிகையை காப்பாற்ற நிர்மலாதேவியின் வாக்குமூலமே திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி பரஸ்பரம் ஊழலிலும் குற்றச்சாட்டிலும் ஊறித்திழைக்கும் இரு  அதிகாரபீடங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுமே தவிற ஒன்றை ஒன்று காட்டிக் கொடுத்து நடவடிக்கை எடுக்காது.

#kodanad_murders #criminal_cabinet #கொடநாடுகொலைகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*