கொடநாடு கொலைகள்- ஷாயன், மனோஜ் கைது உயிருக்கு ஆபத்து!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, கொலைகள் தொடர்பாக வாக்குமூலம் அளித்த ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் நாளை தமிழகம் அழைத்து வரப்படலாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் அதனையொட்டி அத்தோடு தொடர்புடைய ஐந்து பேர் அடுத்தடுத்து விபத்தில் மரணமடைந்த நிகழ்வுகள் தமிழக அரசு மீதும் தமிழக முதல்வர் மீதும் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளன. முன்னாள் தெஹல்கா ஆசிரியர் மேத்யூஸ் தமிழக முதல்வர் ஒரு கொலைக்குற்றவாளி என்று ஆவணப்படத்தை வெளியிட்டு குற்றம் சுமத்திய நிலையில், இந்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்துள்ள மனோஜ்,  ஷயான் ஆகியோர் மீது அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் டெல்லிக்குச் சென்ற தமிழக போலீசார் DL3C7355 என்ற எண்ணுடைய வண்டியில் சென்ற தமிழக போலீசார் மனோஜ், மற்றும் ஷயானை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இந்த தகவலை சென்னை மாநகர கமிஷனரும் உறுதி செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் உயிரச்சுறுத்தல் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொடநாடு கொள்ளையோடு தொடர்புடைய  ஷயன் கொள்ளை நடந்த சில நாட்களிலேயே குடும்பத்தோடு விபத்தில் சிக்க அந்த விபத்தில் அவரது மனைவியும் குழந்தையும் பலியாகிறார்கள். ஷயன் படுகாயத்துடன் தப்புகிறார். இப்போது இவைகள் விபத்து அல்ல, படுகொலைகள் என பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்  ஷயன். தமிழக காவல்துறை இவர்களை கைது செய்திருக்கும் நிலையில், இவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
#kodanad_murders #criminal_cabinet #கொடநாடுகொலைகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*