கொடநாடு கொள்ளை கொலைகள் – பழனிசாமி முழு குற்றவாளி -ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசும் போது,
“கொடநாடு பங்களா எப்போதுமே மர்மம் நிறைந்த பங்களாவாகவே இருந்து வந்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி, அவர் இறந்த பின்னரும் சரி அங்கு பல பிரச்சனைகள் இருந்துள்ளது. கொள்ளையை தொடர்ந்து காவலாளி, டிரைவர், சிசிடிவி ஆப்பரேட்டர் என பலர் இறந்துள்ளார்கள்.இவை அனைத்துமே மர்ம மரணங்கள் ஆகும். இப்போது இந்த மர்மங்களுக்கு ஆதாரம் வெளியாகி உள்ளது. தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் விசாரித்து உண்மையை விடியோ வெளியிட்டுள்ளார். பழனிசாமி சொல்லித்தான் கொலை செய்ததாக குற்றவாளியாக இருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். முதல்வர் முழு குற்றவாளி இதுவரை எந்த குற்றச்சாட்டையும் முதல்வர் மறுக்கவில்லை. கனகராஜ் மற்றும் சயனை தனக்கு தெரியாது என்றும் முதல்வர் சொல்லவில்லை.ஆனால், தனக்கு தொடர்பில்லை என்கிறார். இதன் மூலம் இதில் முழு குற்றாவாளி முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று தெரியவருகிறது. ஆளுநர் அவரை விசாரிக்க வேண்டும். கொலை புகார் நிரூபிக்கப்பட்ட்டால் அவர் பதவி விலகுவாரா?இந்த கொலையில் சசிகலா குடும்பத்தையும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும்’என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

#kodanad_murders #criminal_cabinet #கொடநாடுகொலைகள்

உத்தரபிரதேசத்தில் மாயாவதி-அகிலேஷ்யாதவ் கூட்டணி அறிவிப்பு!

கொடநாடு கொள்ளை கொலைகள் – பத்திரிகையாளர் மீது வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*