கொடநாடு கொள்ளை கொலைகள் – பத்திரிகையாளர் மீது வழக்கு!

கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் நடந்த கொள்ளை கொலைகள் தொடர்பாக விடியோ வெளியிட்ட தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீதும் விடியோவில் பேசியவர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கொடநாட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் பங்களாவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்று அடிக்கடி ஓய்வெடுப்பது உண்டு. இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த சில மாதங்களில் 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி கொள்ளை கும்பல் ஒன்று நுழைந்து காவலாளி ஓம் பகதூரை கொன்று தலைகீழாக கட்டி தூக்கியிருந்தது. இன்னொரு காவலாளி கிருஷ்ண பகதூர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் ஏப்ரல் 28-ஆம் தேதி சேலம் ஆத்தூர் அருகே விபத்தில் கொல்லப்பட்டார். கனகராஜ் கொல்லப்பட்ட மறுநாள், இந்த கொள்ளையில் ஈடுபட்டவரும், கனகராஜின் நண்பருமான சயன் தனது மனைவி வினு பிரியா, நீது ஆகியோருடன் பாலக்காடு அருகில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியதில் சயனின் மனைவியும், குழந்தையும் பலியாகிறார்கள். இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளான கனகராஜ் மரணமடைந்ததும், சயன் மீது ஏற்படுத்தப்பட்ட விபத்தும் செயற்கையானதா என்ற கேள்விகள் முன்கூட்டியே எழுந்த நிலையில், இந்த வழக்கோடு தொடர்புடைய ஐந்து பேர் அடுத்தடுத்து இறந்து போகிறார்கள்.இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை மையமாக வைத்து தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் மேத்யூஸ் நேற்று விடியோ வெளியிட்டார். அந்த வீடியோ பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கொட்நாடு கொள்ளை, கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது என்று மேத்யூஸ் குற்றம் சுமத்தினார். இது பெரும் பரபரப்பை தமிழகத்தில் உருவாக்கியுள்ள நிலையில், செய்தியாளர் மேத்யூஸ் மீதும் விடியோவில் பேசியவர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

#Kodanad_Murders  #kodanad #கொடநாடு_கொலைகள்

#Kodanad_estate

சிபிஐ இயக்குநரை அதிரடியாக நீக்கம் எப்படி ஏன்?

எனக்கும் இந்தி தெரியாது-கனிமொழி!

சபரிமலை போராட்டம் -பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்க முடியாது -சோனியாகாந்தி!

பாஜகவுக்கு இரு பிரதமர் வேட்பாளர்கள் வடக்கில் ராமர்- தெற்கில் அய்யப்பன் ஆனால்?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*