”கொடநாடு சம்பவத்திற்கு திமுகவே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில்  2017 ஏப்ரல் 24-ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது. காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கோடு தொடர்புடைய கனகராஜ் உள்ளிட்ட ஐவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். சயன் காயங்களோடு தப்பினார் ஆனால், அவரது மனைவி குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், இக்கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு உள்ளது என பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சயன், மனோஜை கைது செய்யும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டு அதுவும் தோல்வியில் முடிந்த நிலையில்,

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெரும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி:-“ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொட்நாடு எஸ்டேட் தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கொடநாடு கொள்ளைச் சம்பவம் கூலிப்படையால் நடத்தப்பட்ட ஒன்று. நாங்கள்தான் அதனைச் செய்தோம் என்றால் சசிகலா குடும்பத்தினர் எங்களை சும்மா விட்டு விடுவார்களா என்ன? கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான். தெஹல்கா முன்னாள் ஆசிரியரின்  வாக்குமூலங்கள் அனைத்தும் திமுகவால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம். கேரளாவில் வாலையாறு மனோஜ் மீது பல்வேறு கொலைவழக்குகள் கேரளாவில் உள்ளது. கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக ஆடும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்குவேன்”என்று பேசினார்.

#Kodanad_Murders  #kodanad #கொடநாடு_கொலைகள்,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*