“கோவிலுக்கு வருவதைப் போல உணர்கிறேன்” –ஸ்டாலின்!

பெண்கள் வாவர் மசூதிக்குள் வர தடையில்லை -ஜமாத் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக இதுவரை அதிமுகவினர் மட்டுமே பேசி வந்த நிலையில் இதே குற்றச்சாட்டை இப்போது திமுகவும் கூறத்துவங்கி உள்ளது.இது  தொடர்பாக முன்னர் ஒரு முறை ஸ்டாலின் பேசத்துவங்கிய நிலையில், இப்போது மீண்டும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்களை துவங்கி வைத்த ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின்,

“மக்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது. மக்களைச் சந்திக்க கிராமங்களுக்கு வருவதை கோவிலுக்கு வருவதை போல உணர்கிறேன். நாம் நினைப்பவர்கள்  பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதை பெற முடியும்.

. மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது திமுகவுக்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும்.

தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருந்த போது உடல் நிலை குறித்து முறையாக அறிக்கை கொடுத்தது திமுக. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஜெ உடல் நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணமோ அவர்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறையில் அடைப்போம். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ வரலாம். தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான அதிமுக –பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது” என்று பேசினார்.

#ஊராட்சி-சபை #ஸ்டாலின் #திமுக_கிராமசபை #திமுக_தலைவர்

மேலும் வாசிக்க,

பொருளாதார இட ஒதுக்கீடு ஊழலுக்கு வழி வகுக்கும் – தம்பிதுரை!

வீரப்புதல்வர்களின் வழி நடப்போம்!

திருநங்கையை மகளிரணி தேசிய தலைவராக்கிய ராகுல்காந்தி!

தமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு – நூல் விமர்சனம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*