சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

ªì™LJ™ ¬èî£ù ûò£¡, ñ«ù£x ÝA«ò£¬ó Mñ£ù‹ Íô‹ «ð£h꣘ ªê¡¬ù‚° ܬöˆ¶ õ‰î«ð£¶ â´ˆî ðì‹.

சபரிமலை விவகாரம்

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பெண்கள்வழிபடக்கூடாது என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  கடந்த 2 ந்தேதி  கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து அம்மிணி  (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யபப்ட்டனர். இந்நிலையில், சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள் இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. “எங்களை அவர்கள் கொன்று விடுவார்கள்” என்று இரு பெண்களுமே ஊடகங்களுக்குச் சொல்லி விட்டு தலைமறைவாக இருந்தனர்.

பிந்து என்ற பெண்மணி வீட்டிற்குச் சென்ற போது வீட்டிற்குள் செல்ல அவரை அனுமதிக்கவில்லை. கனகதுர்கா வீட்டிற்குச் சென்ற போது அவரது கணவர், மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் சூழ்ந்து நின்று கனகதுர்காவை தாக்கியுள்ளார்கள். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*