சபரிமலை போராட்டம் -பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்க முடியாது -சோனியாகாந்தி!

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பெண்ணுரிமைக்கு எதிராக நடவடிக்கையை ஏற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி காங்கிரஸ் எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அது போல காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை நடத்துகிறது.

இந்நிலையில், பாஜக பந்த் அறிவித்த நேற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதை கருப்பு தினமாக அனுஷ்டிக்கும் விதமாக கருப்பு உடையில் வருமாறு கேரள எம்.பிக்களுக்கு அதன் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதற்காக கருப்பு  பேண்ட், கையில்  கட்ட கருப்பு பேண்டுகள் விநியோகிக்கப்பட்டன. இதைக் கண்ட சோனியாகாந்தி சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிராக கருப்பு தினம் அனுஷ்டிப்பதையும், கருப்பு துணி அணிந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் வருவதையும் காங்கிரஸ் கட்சி ஏற்காது. அதை உடனே நிறுத்துங்கள். என்று கேரள எம்.பிக்களுக்கு உத்தரவிட்டார் சோனியாகாந்தி.சபரிமலை விவகாரம் கேரளத்தின் லோக்கல் பொலிட்டிக்ஸ் பெண்ணுரிமைக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைகளையும் காங்கிரஸ் ஏற்காது ஆதரிக்காது”என்றும் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

#WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,

மோடி தமிழகம் வருகை -கருப்பு நிற பொருட்களுக்கு தடை!

ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

பயனில்லாமல் போன பசுமாடுகள் –மக்களுக்கு வரி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*