“ சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தோற்று விட்டோம்” பாஜக அறிவிப்பு!

சபரிமலை செய்திகள் #sabarimala_news

மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தும் விவகாரத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என கேரள பாஜக அறிவித்துள்ளது.
கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபாடு நடத்த பந்தளம் மகாராஜா குடும்பமும், நம்பூதிரிகளும், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். உச்சநீதிமன்றமோ வயது வேறுபாடின்றி அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு அமல் படுத்த முயன்ற போது பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என போராட்டங்களை நடத்தின. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவதில் இடதுசாரி அரசு உறுதியாக இருந்த நிலையில், சபரிமலை கோவிலில் வழிபாடு நடத்த சென்ற பெண்களை முற்றுகையிட்டு பக்தர்கள் என்ற போர்வையில் பாஜகவினர் குழப்பம் விளைவித்தனர். தொடர்ச்சியாக பந்த் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.

இதையொட்டி சுமார் 10 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் என்ற நீண்ட பெண்கள் பங்கேற்ற மனித சங்கிலியை காசர்கோட் முதல் திருவனந்தபுரம் வரை நடத்தி மார்க்சிஸ்ட்டுகள் பெண்களின் ஆதரவைப் பெற்றார்கள். வனிதா மதில் போராட்டம் நடந்த மறுநாள்,

பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டதையடுத்து கேரளாவில் பந்த் நடத்திய பாஜக பெரும் வன்முறையில் ஈடுபட்டது. ‘புரோக்கன் விண்டோ” என்ற பெயரில் இந்த பந்தை ரகசிய ஆபரேஷனாக எதிர்கொண்ட கேரள அரசு. போராட்டக்காரர்களை ஒடுக்கியதோடு அவர்கள் சேதப்படுத்திய பொதுச் சொத்துக்களை பொது மக்கள் பார்வைக்கும் வைத்தது.
இது தொடர்பான வழக்கில் இதுவரை 51 பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தியிருப்பதாகவும் அதில், 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் என்றும் மனுத்தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் நினைத்தது போல வெல்ல முடியவில்லை. ஆனால், பெண்களில் இடது சாரிகளுக்கு பெரும் செல்வாக்கு உருவாகியது.

இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பேசும் போது:-
“ சபரிமலை அய்யப்பன் கோவில் பெண்கள் வழிபாடு நடத்தும் விவகாரத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். பக்தர்களின் நம்பிக்கையைக் காக்கும் போராட்டத்தில் பாஜக தோற்று விட்டது. எங்களின் போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெறா விட்டாலும் எங்களால் முடிந்தவரை போராடினோம்.போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் பலர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. அவைகளையும் திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆளுநரிடம் கோரிக்கை வைப்போம். அனைவரும் உண்ணா விரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்”என்று பேசினார்.

சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிரிகளாக முஸ்லீம்களை சித்தரித்த பாஜக அங்கிருந்து பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. நாடு தழுவிய அளவில் கலவரங்களை உருவாக்கிய ராமர்கோவில் விவகாரமே தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை. ஆனால், சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தும் விவகாரத்தில் பாஜகவின் எதிரி யார் என்று யோசித்துப் பார்த்தால் இந்து பெண்கள் என்பதே விடையாக உள்ளது.
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் வழிபாடு நடத்தக் கூடாது என்ற பத்தாம் பசலித்தமான எண்ணத்தை ஐதீகம் என்ற பெயரிலும் நம்பிக்கை என்ற பெயரிலும் பரப்ப முனைந்தால் அதை இந்து பெண்களே ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் கேரளம் நமக்கு அளிக்கும் விடை?

#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala #sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests #SabarimalaDebate #WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,

டேட்டாதான் இந்தியாவின் எண்ணெய் வளம் -முகேஷ் அம்பானி!

”கொடநாடு சம்பவத்திற்கு திமுகவே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*