சிபிஐ இயக்குநரை அதிரடியாக நீக்கம் எப்படி ஏன்?

ரபேல் செய்திகள்

இந்தியாவின் உயர் விசாரணை அமைப்பான சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூடி இரண்டு மணி நேரம் விவாதித்த பின்னர் அலோக் வர்மா நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் போர் விமானங்களை மோடி அரசு வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சுமத்திய நிலையில்,  அலோக் வர்மா ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரித்ததாகவும், அதனால் அவர் கட்டாய விடுப்பில் செல்ல நிர்பந்திக்கப்பட்டார் என்றும் காங்கிரஸ் குற்றம் சுமத்தியது.

இதையடுத்து கட்டாய விடுப்பில் சென்ற அலோக் வர்மா நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஜனவரி 31 வரை அவரது பதவிக்காலம் இருந்த நிலையில், அலோக் வர்மா அவசரமாக நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே. சிக்ரி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில். மோடியும், சிக்ரியும் அலோக் வர்மாவை நீக்க ஆதரவு தெரிவித்ததாகவும், மல்லிகார்ஜுனகார்கே மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பெரும்பான்மை வாக்குகள் அதாவது மூவரில் இருவர் அலோக் வர்மாவை பதவி நீக்க  சம்மதித்ததால்  இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய கண்காணிப்பு ஆணையம் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.அலோக்வர்மாவுக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட நகேஸ்வர ராவின் நியமனங்களை அலோக் வர்மா ரத்து செய்தார். இக்கூட்டத்தின் முன்னர் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை மல்லிகார்ஜுனகார்கேவுக்கு காட்டப்படவில்லை. இந்த கமிட்டியிடம் அலோக் வர்மா தன் தரப்பு நியாயத்தை வைக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

அலோக்வர்மா , #ரபேல்_ஊழல் #போர்பஸ்_விமான_ஊழல் #காங்கிரஸ் #சிவசேனா #பாஜக #nirmalasitharaman #RafaleScamGrandExpose #RafaleScam #ரஃபேல்-ஊழல்,

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*