ஜாக்டோ ஜியோ போராட்டமும் சமூக ஊடகங்களும்-அ.மார்க்ஸ்

தமிழிசையை அவமானப்படுத்திய பாஜக ஆதரவு தினமலர்!

ஜாக்டோ ஜியோ போராட்டமும் பொதுப்புத்தியும்!

யானைகளும் பராசக்தியும்!

ஜாக்டோ – ஜியோ போராட்டம் சிறை நிறப்பும் போராட்டமாக வடிவெடுத்துள்ளது. தற்போது சென்னை எழிலக வளாகத்தில் பல்வேறு இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துக் குழுமியுள்ளனர், மதுரையில் சாலை மறியல் செய்த அரசு ஊழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

நிரந்தரப் பணி, ஓய்வூதியம், எட்டுமணி நேர வேலை, மருத்துவ விடுப்பு என இரு நூற்றாண்டுகாலத் தொழிலாளர் போராட்டங்கள் வென்றெடுத்த உரிமைகள் அனைத்தும் காலாவதியாகிப் போன காலகட்டத்தில் இத்தகைய போராட்டங்களும் எழுச்சிகளும் எல்லோராலும் ஆதரிக்கப்பட வேண்டியவை.

இவை ஏதோ அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும் ஏற்பட்டுள்ள இழப்புகள் அல்ல. இதற்கு இணையாகப் பொது வெளியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நாம் இவற்றோடு இணைத்துப் பார்ப்பது அவசியம்.

பொது வெளியில் பெரிய அளவில் இன்று வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வேலையுரிமை எல்லாம் இன்று பறிபோய்விட்டன.

அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், விவசாயிகள், கார்பொரேட்களுக்காக மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்புக்கு ஆளானவர்கள் எனப் பலதரப்பினரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு மருத்துவ மனைகள் இவை எல்லாமும் 50 சதம் தனியார்கள் வசம் ஒப்படைக்கப்படும் நிலையும் உள்ளது.

இவை எல்லாமுமே அரசுகளின் இன்றைய தவறான கொள்கைகளின் விளைவுகள்.

எல்லோரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டிய காலகட்டம் இது.

துரதிர்ஷ்டவசமாக சமூக ஊடகங்களில் பலர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுகின்றனர்’ அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை, இவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படும் ஊதியமே அதிகம் என்றெல்லாம் கருத்துக்கள் பெரிய அளவில் பேசப்படுகின்றன.

இன்று அரசுப் பணிகள் இல்லாத நிலையில் தனியார்துறைகளில் ஊழியர்கள் மீதான சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களில் அதிகமாகியுள்ளன. அவர்களுக்கு ஓய்வூதியம், விடுப்புச் சலுகைகள் எதுவும் கிடையாது. அத்தோடு அவர்கள் ஒரு நாளைகுக்குக் குறைந்தபட்சம் 10 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஏராளமானோர் வேலை இல்லாமலும் உள்ளனர். இதை எல்லாம் காரணம் காட்டி, ‘இந்த அரசு ஊழியர்களுக்கு என்ன கேடு, இவர்கள் ஏன் போராடுகிறார்கள்?’ என முகநூல் பதிவர்கள் பலரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். பிரச்சினையை இப்படிப் பார்ப்பது அபத்தம். இதன் மூலம் அவர்கள் பொது எதிரிக்குச் சேவை செய்கிறார்கள், அரசின் கார்பொரேட் நலனுக்குத் தாம் துணை போகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்றால் அரசு ஊழியர் விதிகள் உள்ளன. அதன்படி நடவடிக்கைகள் எடுக்கட்டும், நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்யட்டும். முதற்படியாக காலியாக உள்ள வேலை இடங்களைப் பூர்த்தி செய்யட்டும்.

தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது எனத் தமிழில் ஒரு முதுமொழி உண்டு. பாதிக்கப் பட்டவர்களிடமே குற்றம் காண்பது அரசு மற்றும் கார்பொரேட் நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமையும்.

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வேலை இல்லாதோர், பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டிய காலம் இது.

#Jacto_jio #ஜாக்டோ_ஜியோ #அரசு_ஊழியர்கள்_போராட்டம்

பாஜக முதல்வர் யோகி சாதனை – மூன்றாயிரம் என்கவுண்டர்கள் 70 கொலைகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*