ஜாக்டோ ஜியோ போராட்டமும் பொதுப்புத்தியும்!

ஜாக்டோ ஜியோ போராட்டமும் பொதுப்புத்தியும்!

யானைகளும் பராசக்தியும்!

பாஜக முதல்வர் யோகி சாதனை – மூன்றாயிரம் என்கவுண்டர்கள் 70 கொலைகள்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்றவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அரசும், நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த போராட்டம் தொடர்பாக முகநூல், உள்ளிட்ட இணைய ஊடகங்களில் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், அவர்கள் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் விதமாகவும் பல கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இவ்விதமாக பகிரப்படும் கருத்துக்கள் அரசு இயந்திரத்தின் அடக்குமுறையை ஆதரிப்பதோடு, இரக்கமற்று தண்டனைகளையும் முன் மொழிகிறது. தனியார் தாராளமயத்தை முன்னெடுக்கும் அரசுக்கு ஆதரவான இந்தக் கருத்துக்களை எழுதுகிறவர்கள் யார்?

அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக பொது வெளியில் கொட்டப்படும் கருத்துக்கள் பலவகையானது அல்ல, இரண்டு வகையினர்தான். ஒன்று இடஒதுக்கீடு, சமூகநீதி, அரசு வேலை, போன்றவற்றை எதிர்க்கும் பாரம்பரிய எதிர்ப்பார்கள். இவர்களுக்கு ஆசியர்கள் போராடும் போதெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அக்கறை வந்து விடும். நீட் போன்ற விவகாரங்களில் சிபிஎஸ்சி பக்கம் சாய்ந்து விடுவார்கள். தவிறவும் இவர்கள் ஏதோ ஆசியர் போராட்டத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. பெரும்பான்மை மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக சமூக விரோத எண்ணம் கொண்டவர்கள்.

இரண்டாம் வகையினர்

அரசு வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, 12 மணி நேர வேலைக்கு மிகக் குறைந்த ஊதியம், பெறும் கணிசமான தனியார் ஊழியர்கள். இன்னொரு பக்கம் நவீன கொத்தடிமைகளின் அடையாளமாக இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் அனைவருக்கும் அரசுப்பள்ளி ஆசியர்கள் மீது கோபம் உள்ளது. அதிக உழைப்புக்கு சுரண்டப்படும்  இந்த வர்க்கத்தினர் அரசு ஊழியர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள் என்று சொல்வதற்கும் இடமுண்டு. குடிமக்களை இரண்டாக பிளவுபடுத்தி அரசு ஊழியர்களுக்கு எதிராக பொதுமக்களையே திருப்புவதில் அரசு வெற்றி பெறுவதற்கு இது போன்ற மன நிலை காரணமாக உள்ளது.

அரசு ஊழியர்கள் என்போரும் தங்கள் கோரிக்கைக்காக மட்டுமே போராடுகிறவர்களாக இருக்கிறார்கள். மற்றபடி அதிக அ
ளவு டவுரி கொடுக்கிறவர்களாகவும், கந்து வட்டி தொழிலிலும் ஆசியர்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் வர்க்க நிலையில் தாங்கள் மேம்பட்ட பிறகு தங்களுக்கு கீழானோரை இவர்கள் மதிப்பதில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்படுகிறவர்கள் அரசிடம் பழைய உரிமைகளை கோரி நிற்கும் இதே காலக்கட்டத்தில்தான் மக்கள் மொத்தமாக அத்தனை உரிமைகளையும் இழந்து அம்மணமாக நிற்கிறார்கள். மக்கள் அனுபவித்து வந்த அடிப்படை மானியங்களைக் கூட இழந்து விட்டார்கள்.இது போன்ற எத்தனையோ துறைகளில் உரிமைகளை தொழிலாளர்கள் இழந்து நிற்கும் போது அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு கண்டு கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*