’ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா?

இந்த தலைப்பே உங்களுக்கு ஆச்சரியமூட்டக் கூடும். ஆமாம்,  இப்போது திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தினகரன் தரப்பை டேமேஜ் ஆக்கும் விதமாக மீண்டும் ஜெயலலிதா மரணத்தை கையில் எடுத்திருக்கும் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு, அடுத்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கும் போது ஜெயலலிதா போயஸ் கார்டனில் தூக்கில் தொங்கினார். மன உளைச்சலுக்கு காரணமானவர்கள் அவரோடு தங்கியிருந்தவர்கள்தான். எனவே அது பற்றி விசாரிக்க வேண்டும் என இன்னொரு அமைச்சர் சொன்னாலும் சொல்வார். அப்படித்தான்  செல்கிறது ஜெயலலிதா மரண விவகாரம்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஜெயலலிதா மரணத்தின் அடுத்த பாகத்தை துவங்கி வைத்திருக்கிறார்.  ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என மூன்று மருத்துவர்கள் சொல்லியும், அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யவில்லை. இது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவையும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சண்முகம் குற்றம் சுமத்தினார்.

சண்முகம் குற்றம் சுமத்தியிருப்பதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனின் பேரன். பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தாலும், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த குடும்பம். என்னும் நிலையில்தான், அவர் மீதே குற்றம் சுமத்திய அமைச்சரை வியப்போடு பார்க்கிறார்கள்.

இது  திருவாரூர் இடைத்தேர்தலுக்கு முன்னர் தினகரனை வழிக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை என்று கூறுகிறார்கள்.  எது எப்படி இருந்தாலும் ஒரு தரப்பை அச்சுறுத்தி பணிய வைக்கவே இந்த ஆவேசம் என்பது வெளிப்படையாக  தெரிகிறது. ஆனால், சட்ட அமைச்சர் சண்முகத்தின் கூற்றில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. “ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட  வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை தமிழக அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ராமமோகன்ராவையும், ராதாகிருஷ்ணனையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்.

தமிழக அமைச்சரவையை வழிநடத்திச் செல்லும் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தவர் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.  பன்னீர் முழுமையாக பாஜக கட்டுப்பாட்டில் இருந்தார். அவர் பதவி பறிபோகும் சூழலில்தான் அவர் தர்மயுத்தத்தையும் துவங்கினார். அப்போது பன்னீர்செல்வம் தலைமையிலான இதே அமைச்சரவையில் சி.வி சண்முகமும் அமைச்சராக இருந்தார்.

எனவே கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள். மிக முக்கியமான என்ன காரணத்திற்காக ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பன்னீர்செல்வம் அமைச்சரவையை வழிநடத்திச் செல்லும் தலைமைப்பதவிக்கு கொண்டு வரப்பட்டார். அப்படி அவரை கொண்டு வர பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பதை எல்லாம் விசாரித்தால்தான் ஜெயலலிதா கொலை, அல்லது தற்கொலையில் முழு உண்மையும் வெளிப்படும்.

#Jayalalitha_dead #Apollo # #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala,

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு?

அப்பாவிப்பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம்  செய்தி தொகுப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*