டேட்டாதான் இந்தியாவின் எண்ணெய் வளம் -முகேஷ் அம்பானி!

Mukesh Ambani addresses during the inauguration of India Mobile Congress at Pragati Maidan on September 27, 2017 in New Delhi, India.

”கொடநாடு சம்பவத்திற்கு திமுகவே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தொழிலபதிபர்களின் குஜராத் உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இம்மாநாட்டில் இந்திய கார்ப்பரேட் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, தீபக் பரிக், சந்திரசேகரன், கே.எம்.பிர்லா, உதய் கோடக், பி.கே. கோயாங்கோ உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் தொழிலபதிகள் கலந்து கொண்டனர், இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி:-

“ ரிலையன்ஸ் பிறந்த இடம் குஜராத் ஆகும். குஜராத் மாநிலத்தில் மட்டும் 3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். 10 லட்சம் வாழ்வாதாரப்பணிகளை உருவாக்கி உள்ளோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை ரிலையன்ஸ் இரட்டிப்பாக்கும்.

எங்களது ஜியோ  நெட்வோர்க்கில் இப்போது 5 G தயாராக உள்ளது. இந்த புதிய உலகில் மக்களிடம் உள்ள தகவல்கள்தான் இந்தியாவின் புதிய எண்ணெய் வளம் ஆகும். டேட்டாதான் புதிய செல்வம்.  இந்திய மக்களின் டேட்டாக்களை இந்தியாதான் கட்டுப்படுத்த வேண்டும். அது இந்திய மக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். மாறாக பெரு நிறுவனங்களாலும், குறிப்பாக மேலை நாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படக் கூடாது. இந்த தரவு இயக்கப்படும் புரட்சியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது” என்று பேசினார்.

மொபைல் இண்டர்நெட் எனப்படும் டேட்டா மலினமான விலையில் கிடைக்கும் இந்தியாவில் கிலோ அரிசியில் விலை ஏழைகள் வாங்கும் நிலையில் இல்லை. தரமான உணவோ, உட்டச்சத்துள்ள உணவோ இல்லாமல் 80% பேர் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். இந்தியாவில் பெரும் செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வந்தர்கள் ஆவதும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவதுமே இந்தியாவின் கார்ப்பரேட் பொருளாதாரமாக உள்ளது.

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*