திருநங்கையை மகளிரணி தேசிய தலைவராக்கிய ராகுல்காந்தி!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிரணியின் தேசிய செயலாளராக அப்சரா ரெட்டி என்ற திருநங்கையை நியமித்துள்ளார் ராகுல்காந்தி. இது  முற்போக்கு முகாம்களில் அவருக்கு நற்பெயரை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அப்சரா ரெட்டி திருநங்கை. சமூக சேவகர், டெலிவிஷன் டாக் ஷோ நடத்துகிறவர். அதிமுக பிரமுகர் என பல முகங்களைக் கொண்ட அப்சரா ரெட்டி தனக்கென தனி இடத்தை அரசியலில் உருவாக்க போராடி வந்தவர். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிமுகவில் மரியாதைக்குரியவராக வலம் வந்தவருக்கு அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பெரிய முக்கியத்துவம் இன்றி இருந்து  வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பொதுவாகவே திருநங்கைகளை அனைத்துக் கட்சிகளுமே கட்சியில் இணைத்துக் கொள்வார்கள். முடிந்தால் திருநங்கைகள் பிரிவு என்ற ஒன்றை  உருவாக்குவார்கள். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியோ அபசரா ரெட்டியை அகில இந்திய காங்கிரஸ் மகளிரணியின் தேசிய செயலாளராக நியமித்துள்ளார்.

ஒரு திருநங்கையை தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் அமர்த்தியதால் பொதுவில் கவனம் ஈர்த்துள்ளார் ராகுல்காந்தி.

#Congress_Apsara_reddy #Transgenders #Transgender_Apsara_reddy #அப்சரா_ரெட்டி #மகளிரணிதலைவர்_அப்சரா

மேலும் வாசிக்க,

தமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு – நூல் விமர்சனம்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*