திருவாரூர் இடைத்தேர்தல் யாருக்கு அச்சம் உண்மை என்ன?

கௌசல்யாவுக்கு ஒரு பத்திரிகையாளரின் பதிவு!

திருமாஎன்கடைசிமாணவன்பேராசிரியர்பேச்சு!

மோடி அமித்ஷா கேரளம் வருகை!

வரவிருக்கும் 28-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவால் காலியான தொகுதியான திருவாரூருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன. அதிமுக வருகிற 10-ஆம் தேதி வேட்பாளாரை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றகழக தலைவர் தினகரன். திமுக இடைத்தேர்தலைக் கண்டு அஞ்சுவதாகவும், அதனால் நீதிமன்றங்களில் வழக்கு போடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுவாகவே திராவிட இயக்க வெறுப்பு, திமுக வெறுப்பு உள்ளவர்கள் அனைவருமே இந்த குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். பாஜகவும் இதே குற்றச்சாட்டை கூறியுள்ளது.

ஆளும் கட்சியான அதிமுக குறித்து எவரும் வாய் திறக்காமல் திமுக குறித்து பலரும் கருத்துச்  சொல்வதும், திமுக குறிவைத்து தாக்கப்படுவதும் தொடரும் நிலையில், திமுக உண்மையிலேயே திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயங்குகிறதா என்பதை பார்ப்போம்.

வெற்றி திமுகவுக்குத்தான்

திருவாரூர் தொகுதி திமுகவின் கோட்டை. இது கடந்த பல  வருட தேர்தல் முடிவுகளை பார்ப்பவர்களுக்கே தெரியும். இடது சாரிகளும் கணிசமான வெற்றியை ஈட்டியுள்ள இந்த தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கே கிடையாது.  ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவே இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மீது குற்றம் சுமத்துவது அபத்தமாகவே  தெரிகிறது.

தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், 19 தொகுதிகளை காலியாக வைத்து விட்டு, இந்த 19 தொகுதிகளிலும் தாமதமான காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட திருவாரூருக்கு முதன் முதலாக தேர்தல் நடத்துவது முறைகேடாது.

காஜா புயல் பாதிப்பால் காவிரி டெல்டா சிதைந்துள்ளது. அதில் திரூவாரூர் தொகுதியும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பலருக்கும் ரேஷன் கார்டுகளோ, முறையான வாக்காளர் அடையாள அட்டையோ இல்லை. 29-ஆம் தேதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 24 -ஆம் தேதிக்கு வாக்காளர் அடையாள அட்டை இறுதி செய்யப்படும் என்பது மோசடியாகவே  தெரிகிறது.

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அதிமுக இரண்டும்தான் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்பாளரையே அறிவிக்காத பாஜக திமுக தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது என்பது வேடிக்கையாக உள்ளது.

அதிக அளவு முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்பு திருவாரூரில் உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.ராஜா நீதிமன்றத்திற்கு சென்றிருப்பது சரியானதாகவே படுகிறது. திமுகவின் நிலைப்பாடோ தேர்தலை 20 தொகுதிகளுக்கும் நடத்த வேண்டும். திருவாரூருக்கு மட்டும் நடத்தினாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறது.

தினகரன் -பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறார். பாஜக மத்தியஸ்தத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும், அதிமுகவும் இணையும் என்று தெரிகிறது. முன்னர் பாஜகவை எதிர்த்தது போல இப்போது தினகரன் பாஜகவை எதிர்ப்பதில்லை என்பதில் இருந்து திருவாரூ தேர்தல் ஆளும் கட்சியான அதிமுகவை எதிர்ப்பதை விட திமுக வென்று விடக்கூடாது என்கிற நோக்கமே பிரதானமாக  தெரிகிறது.

#திருவாரூர்_இடைத்தேர்தல் #ஸ்டாலின் #கருணாநிதி #தினகரன் #ஓபிஎஸ்_இபிஎஸ்

ராகுலைக் கண்டு அஞ்சி ஓடும் பிரதமர் மோடி!

சபரிமலை போராட்டம் -பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்க முடியாது -சோனியாகாந்தி!

பாஜகவுக்கு இரு பிரதமர் வேட்பாளர்கள் வடக்கில் ராமர்- தெற்கில் அய்யப்பன் ஆனால்?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*