தீண்டாமைக்கு எதிராக போராடிய தீரர் லட்சுமண அய்யர்

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் மக்களால் “தியாகி “என்று அழைக்கப்படும் தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் மறைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. காந்திஜி அவர்களை சந்தித்தபோது பட்டியலின மக்களுக்கு சேவை செய் எனக் கேட்டுக்
கொண்டதால் இவர் பட்டியலின மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்.ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தொடர்ந்து உழைத்தவர். எனவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அவரது நினைவைப் போற்றும் வகையில் கடந்த 3 ஆண்டுகளாக நினைவஞ்சலிக் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் நாம் திறந்தவெளி சிறப்புக்கருத்தரங்கம் நடத்துகிறோம். பட்டியலினத்து மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய தீண்டாமைக்
கொடுமைகளை பொறுத்துக் கொள்ள இயலாமல், அல்லது அவர்கள் நிலமில்லாதவர்களாக, படிப்பறிவு இல்லாதவர்களாக, சாதிய ஒடுக்கு முறைகளாலும், சமூக ஒடுக்கு முறைகளாலும் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிலிருந்து அவர்கள் மீள அவர் செய்த முயற்சியின் ஒரு பகுதிதான் அவர் தொடங்கிய டி.எஸ்.ராமன் மாணவர் விடுதி மற்றும் சரோஜினி மாணவியர் விடுதிகள். பல ஆயிரம் மாணவ, மாணவிகள் இங்கு படித்து நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர். அதனை நன்றியோடு நினைவு கூறுபவர்கள் இருக்கிறார்கள். இதுமட்டு மின்றி கோபிச்செட்டிபாளையம் பகுதியில் பல பள்ளிகளுக்கு தனது குடும்ப சொத்துக்களை தானமாகக் கொடுத்துள்ளார். பல அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும், பட்டியலின மக்கள் குடியிருப்பதற்கும் தனது சொத்துக்களைக் கொடுத்துள்ளார். இப்படி தனது நிலங்களைத் தானமாக கொடுத்தும் இதர வகையில் தன் சொத்துக்களை இழந்தவர். இதன் அளவு சுமார் 650 ஏக்கர் ஆகும்.

சுதந்திரப் போராட்டம்
தியாகி லட்சுமண அய்யர் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சுதந்திரப்போராட்டத்திலும், பட்டியலின மக்களின் மீது பரிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இவரது தந்தை சீனிவாச அய்யர் காங்கிரஸ்காரர். விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர். சைமன் கமிஷனை எதிர்த்தவர். இதனால் இயற்கையாக ஏற்பட்ட தாக்கம் மற்றும் காந்திஜியின் கட்டளைகளை ஏற்று தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆண்டுகள் மூன்று மாதம் சிறை சென்றிருக்கிறார். இவரது துணைவியார் லட்சுமி அம்மையாரும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் பெண் என்பதால் கவர்னரால் சிறை தண்டனையை ரத்து செய்து அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டடுள்ளார். சிறையில் செல்வந்தர்களுக்கு சிறப்பு சலுகை இருந்தும் அதனை ஏற்காமல் மற்றவர்களோடு சோளம்,கம்பு உணவையே உட்கொண்டுள்ளார். சுதந்திரம் பெற்ற தினமான ஆகஸ்ட் 15 குறித்து அவர் “வீட்டு வாசலில் பாரத மாதா சிலை வைத்து ஊரே கொண்டாடினோம். ரொம்பவே எதிர்பார்த்தோம்.
1947 க்குப்பின் சுதந்திர அரசாங்கம் வந்ததே ஒழிய ஒன்றும் செய்ய
முடியவில்லை” என்று ஆதங்கப்பட்டுள்ளார் என்று அவரது மாணவர்
கள் பதிவு செய்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பு
கோவை வேளாண் கல்லூரியில் பணக்கார மாணவர்களுக்காக ஓர் வகுப்பு நடத்தப்பட்ட போது, தமக்கு கம்யூனிஸ்ட்டுக்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், விடுதிக்குள் தோழர் ரமணி போன்றவர்கள் சுவர் ஏறிக்குதித்து வந்து வகுப்பு எடுத்துள்ளதாகவும், தான் காங்கிரஸ் காரனாகவும், பின் ஜனதா கட்சியில் இல்லையென்றால் கம்யூனிஸ்டாகவே இருந்திருப்பேன் என கூறியதாகவும் தெரிவிக்கிறார்கள். இவரும் சர்.சி.வி.ராமன் மகன் சந்திரசேகரன் ஆகியோரும் திருவனந்தபுரம் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கக்கூஸ் எடுக்கும் பணியை இவர் செய்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் நகராட்சித் தலைவரான பின் கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்ட இந்த நிகழ்வு காரணமாக இருந்திருக்கும். சாதி மறுப்பாளரான தியாகி லட்சுமண அய்யர் தனது விடுதியில் பயிலும் இதர மாணவர்களை பட்டியலின மக்கள் குடியிருக்கும் அழைத்துச் சென்று அங்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். தவிர பட்டியலின குழந்தைகளைக் குளிப்பாட்டி கூட்டு வழிபாடு செய்வித்தவர். சாதி இந்துக்கள் பட்டியலின மக்களுக்கு சம உரிமை வழங்குவது தான் அவர்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் என்று கூறியுள்ளார். பட்டியலின மாணவ, மாணவியர்களை கோவில்களுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்வித்துள்ளார். தனது வீட்டிற்கே அழைத்து வந்து சமபந்தி விருந்து படைத்தார். இதன் காரணமாக அக்கரகாரத்தில் இருந்த பிராமணர்கள் அய்யர் குடும்பத்தை சாதி நீக்கம் செய்தனர்.

டி.எஸ்.ராமன் மற்றும் சரோஜினி விடுதிகள்
டி.எஸ்.ராமன் மாணவர் விடுதி மற்றும் சரோஜினி மாணவியர் விடுதிகள். பல ஆயிரம் மாணவ, மாணவிகள் இங்கு படித்து நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர். அதனை நன்றியோடு நினைவு கூறுபவர்கள் இருக்கிறார்கள். பலர் டாக்டர்களாக, பொறியாளர்களாக, ஆசிரியர்களாக, காவலர்களாக, அரசு ஊழியர்களாக பணி பெற்று வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர். முன்னாள் மாணவர்கள் பலரைச் சந்திக்கும் போது அனைவருமே இந்த வாழ்க்கை லட்சுமண அய்யர் அவர்களால் கிடைத்தது என மகிழ்கின்றனர்.
விருந்துகளில் பட்டியலின மக்கள் உணவு வாங்கும் நிலை 
பட்டியலின மக்கள் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்த காலம். நாட்டில் பஞ்சமும் பட்டினியும் உச்சத்தில் இருந்த காலம். பட்டியலின மக்கள் பிற சாதியினர் குடும்ப நிகழ்ச்சிகளில் கொடுக்கும் உணவுக்காக பல மணி நேரம் காத்திருந்து பாத்திரங்களில் வங்கிச் சென்று குடும்பமே உண்ணும் அவலமான நிலைமையிருந்த காலம். இதனை லட்சுமண அய்யர் அவமானமாகக் கருதி பட்டியலின மக்களிடம் எடுத்துச் சொல்லி இதுபோன்று உணவு கேட்டு காத்திருப்பது அவமானம் என்று பட்டியலின மக்களுக்குப் புரிய வைத்தார். அவர் தொடர்ந்த முயற்சியால் இதனைத் தடுத்தார்.
இன்றும் பாதிக்கப்படும் பட்டியலின மக்கள் நிலமில்லாமல், வேலையில்லாமல், படிக்கவும் இயலாமல் உள்ளனர். கல்வி அனைவருக்கும் இலவச மாக்கப்பட வேண்டும். குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லை. அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்தால் கூட அதிகாரத்தைப் பயன்படுத்தி, சாதியைப் பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். அரசு நிர்வாகவும் உடந்தையாகிவிடுகிறது. அந்தியூர் மந்தை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு பல பத்தாண்டுகள் போராடினாலும், தீர்வு கிடைக்கவில்லை.

பேரூராட்சி நிர்வாகம் தங்களது நிலம் என்று வீடுகளை இடிக்க முயற்சித்தது. பழைய ஆவணங்களைப்பெற்றும், நீதிமன்றத்தில் நத்தம் நிலம் எனத்தீர்ப்பு பெற்றும் தாமதம் செய்தனர். கோப்புக்களைக் காணவில்லை என்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரோ தன்னிடம்தான் மனு கொடுக்க வேண்டும் என
வட்டாட்சியரையே வசைபாடியுள்ளார். வட்டாட்சியர் தன்னிடம் கொடுத்த மனுவை திரும்ப கொடுத்துவிட்டார். அதனை சட்டமன்ற உறுப்பினரிடமே கொடுக்க வைத்தோம். அப்பொழுதும் பட்டா கொடுக்கவில்லை. போராட்டம்… தொடர் போராட்டம். இரு முறை
காத்திருக்கும் போராட்டத்திற்குப்பின் தற்பொழுது பட்டா வழங்கப்
பட்டுள்ளது.பல இடங்களில் இது போன்ற நிலை தொடர்கிறது. ஆகவே பட்டியலின மக்களுக்கு குடியிருக்க வீட்டு மனையும், விவசாயம் செய்ய நிலமும் வழங்கப்பட வேண்டும். வேலை கொடுக்க வேண்டும். சுய தொழில் தொடங்க உதவ வேண்டும். இதற்கு அரசுத்துறையை பாதுகாக்க வேண்டும். தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் துவக்கிய விடுதிக்கு ரூ.11.25 லட்சம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு பெற்று கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. லட்சுமண அய்யர் இருந்த காலத்திலேயே இந்த விடுதிகளையும், பள்ளியையும் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆனாலும் அவர் துவக்கிய பள்ளியும், விடுதிகளும் இன்றும் சிறப்பாக நடந்து வருகிறது.

தியாகி லட்சுமண அய்யர் அவர்களுக்கு சிலை
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆண்டுகளுக்கும் மேல்
சிறை சென்றவருக்கு, கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் இரு முறை தலைவராக இருந்து குடி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க தனது நிலத்தையே தண்ணீர் தொட்டி கட்ட கொடுத்து, கையால்
மலம் அள்ளும் கொடுமையை அகற்றியவர். முன்னாள் மாணவர்கள் சிலை வைக்க முயற்சித்தபோது, இவர் தானம் கொடுத்த பள்ளியில் இவருக்குச் சிலை வைக்க அனுமதிக்க வில்லை. விடுதியின் உள்ளே சிலை வைத்துள்ளனர். எனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபி நகராட்சி முன்பு காந்தியடிகள் சிலைக்கு அருகில் சிலை வைத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளது.
தீண்டாமை, வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், சமூக நல்லி
ணக்கம் நிலவவும், சாதி, மதம் பேதமில்லா நிலைமைக்காக லட்சு
மண அய்யர் செய்த சேவையை தொடர தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்.

மா.அண்ணாதுரை
மாவட்ட தலைவர், தீஒமு, மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)

நன்றி -தீக்கதிர்

#theendamai #laksmana_iyar #caste_discrimination #சாதி_பாகுபாடு

எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*