நாட்டில் நெருக்கடி நிலவுகிறது -சோனியாகாந்தி!

மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு!

டேட்டாதான் இந்தியாவின் எண்ணெய் வளம் -முகேஷ் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கொத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் மாநாட்டை வரவேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
நேற்று கொல்கொத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட மாநாடு நடந்தது. இதில் முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு வங்க மொழியிலும், தமிழிலும் பேசினார். பல லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு இந்தியா முழுக்க கவனிக்கப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டில் பேசிய அனைவருமே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி:-
“ பிரித்தாளும் மோடி அரசை வீழ்த்துவதற்காக பல தரப்பட்ட தலைவர்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சிதான் இந்த மாநாடு.நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். நாட்டில் உள்ள விவசாயிகள் மீதும் எல்லையில் உள்ள வீரர்கள் மீதும் ஒரு விதமான நெருக்கடி நிலவுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை, வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. மீனவர்கள் பேரிழப்பைச் சந்தித்து வருகிறார்கள்”என்றும் குறிப்பிட்டுள்ளார் சோனியாகாந்தி.

”கொடநாடு சம்பவத்திற்கு திமுகவே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*