பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

கொல்கொத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்!

அஞ்சுகிறது அரசு- பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

மோடிக்கு பிலிப் கோட்லேர் விருது உண்மை என்ன?

ஊடகவியலாளர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராகவும் புகழ் பெற்ற சாமியாராகவும் இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம். இவர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக பத்திரிகையாளர் சத்ரபதி செய்தி வெளியிட்டார். இதையொட்டி 2002 –ஆம் ஆண்டில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம் மீது 2003-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2006-ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தனியாக  நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார்  சாமியாருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என ஹரியானா மாநில பஞ்ச்குலா நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி அறிவித்தது. இவரோடு மேலும் மூவரையும் குற்றவாளி என்றும் அறிவித்தது. இதனையடுத்து இன்று மாலை தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. அதில் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

சபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்!

சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*