பயனில்லாமல் போன பசுமாடுகள் -மக்களுக்கு வரி!

தெருக்களில் திரியும் பசுமாடுகளை பாதுகாக்க அரை சதவீதம் வரி விதிக்கப்படுவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பசுக்களின் பெயரால் வாரத்திற்கு இரண்டு கொலைகளாவது நடந்து வருகிறது. ஆனால், கால்நடைகளோ பல்கிப் பெருகி தெருக்களில் சுற்றித்திரிகிறது. மாநிலம் முழுக்க 750 கோசாலைகள் உள்ள நிலையில் போதுமான உணவின்றியும், பராமறிப்பு இன்றியும் பல பசுக்கள் மரணிக்கும் நிலையில் சில பொருட்களுக்கு அரை சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய் பசு பராமறிப்பிற்கு பயன்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

விவசாய விளை பொருள் விற்பனைக் கூடங்களில் ஒரு சதவீத வரி அதிகரிக்கும்,அது போல மதுபானங்கள், சுங்கச்சாவடிகள் போன்றவையிலும் வரி உயரும் என தெரிகிறது.அரசின் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

நாட்டை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளியவர்கள்!

சுதந்திர காலத்தையொட்டிய இந்தியாவில் பிரிவினைக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், இந்து, முஸ்லீம் கலவரங்களுக்கு காரணங்கள் இல்லை. ஆயிரமாயிரமாம் இந்து, முஸ்லீம் மக்கள் கொல்லப்பட வதந்திகளே போதுமானதாக இருந்தது. இந்து, முஸ்லீம் பெண்களை கவர்ந்து செல்கிறார்கள் என்ற வதந்திகளைப் போலவே பசுக்களை முஸ்லீம்கள் கொல்கிறார்கள் என்ற வதந்தியும் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.

இன்று மோடியின் ஆட்சியின் கீழ் கௌரக்‌ஷா இருப்பது போல அன்றும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அது துவங்கியே பிரிவினைக்கு முன்னர்தான். விளைவு பசுக்கள் பயனற்று வீதியில் சுற்றித்திரிந்தன. இதனால் ஏற்பட்ட கேடுகளும், அதிகம்.

இப்போது அதெ நிலை, அனாமதேயமாக சுற்றும் மாடுகள் விளைநிலங்களை பாழ்படுத்தின. நிலங்களின் உரிமையாளர்கள் மாடுகளை பிடித்து ஆளில்லாத இடங்களில் அடைத்து விட மாடுகள் பட்டினியால் இறக்கும் நிலை… அதே நிலைதான் இன்று ராஜஸ்தான், உபி போன்ற மாநிலங்களில் இன்னொரு பக்கம் பசுவை பராமறிப்பதில் ஏற்படும் அசௌகரியங்களால் பலர் கோசாலைகளுக்கு மாடுகளைக் கொடுக்க.கோசாலைகள் மாடுகளால் நிரம்பி வழிகிறது. அவைகள் உணவில்லாமல் செத்து மடிகின்றன. உணவின்றி ஒரு மாடு இந்தியாவில் மரிக்கும். ஆனால், அந்த மாட்டை ஒருவன் உணவாக உட்கொண்டால் அவன் கொலை செய்யப்படுவான் இதுதான் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை.

பசுக்கள் பயனற்று தெருவில் இடைஞ்சலாக சுற்றித்திரியும் நிலையில், இப்பொது பசுக்களின் பெயரால் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

#cow_rakshak #yogi_adithyanath

அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*